பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் ஆட்சி! உழைப்பினிலே பழக்கத்திலே ஒன்றுபட்ட இன்பக் காதல் தன்னாலே - அவர் உடல் நிழலாய் வாழ வந்தார் மண்மேலே! பாத்தியிலே நீர் பாய்ச்சும் பாவையைப் பாரீர் - அதைப் பாத்துக் கணவன் ஏத்தம் இறைக்கும் நேர்த்தியைப் பாராய்! ஆத்துக்குள்ளே ஆடை துவைக்கும் அழகியைப் பார் - அவள் அருகில் நிற்கும் உரிமை கொண்டான் ஆனந்தம் பாராய்! காணும் காட்சியே! காதல் ஆட்சிதான்!! சாரசம். வசீகரக் கண்கள்! சாரசம். வசீகரக் கண்கள் சீர்தரும் முகம் சந்த்ர பிம்பம் மனோகர ஓவியப் பெண்ணாள் வாய்த்தால் பேரின்பம் சுவாரஸ்யம் ஆடும் மயிலாள் அபிநய மொழியாள் - இவள் அன்பை நாடும் புவிமையலால் ஈடில்லாத் தேவகுமாரி சிங்காரி - மிகும் இகாதி சாரசவாரி (சாரசம்) - கிருஷ்ணபக்தி 77