பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

12 வுக்குக் கொண்டு வருவதற்கு நம் வசம் உள்ள ஒரே நிறுவன மாகவும் கருதுகிறார்கள். ஐ. நா. வுக்குத் தோல்வி ஏற்படும் போது நம்மில் பலருக்கு உண்டாகும் கோபமும் வேதனை யுமே அந்த நிறுவனத்துக்குக் கொடுக்கப்படும் மிகச் சிறந்த பாராட்டாகும். போரைத் தவிர்த்து அமைதியை நிலை நாட்டுவதற்கும், ஆக்கிரமிப்பை ஒழித்து நீதியை நிலை நிறுத்துவதற்கும். கொடுங்கோலனின் முன்னேற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் உலகத்துக்கும் ஒரு நிறுவனம் தேவை என்பதே இதன் கருத்து. நாம் விரும்பும் பலன் ஐ.நா . மூலம் கிடைக்காமல் போகும்போது நமக்குக் கோப மும் வேதனையும் உண்டாவதற்கு இந்த உயர் நம்பிக்கை தான் காரணம். உலக அமைதியும் நல்லுணர்வும் மிகமிக அவசியம் என்பதில் நமக்குள்ள நம்பிக்கையை வலுப் படுத்திக் கொள்வதன் மூலம் ஐ.நா வை வலுவாக்க வேண் டும். இதற்காகவே ஐ.நா. தினம் கொண்டாடுகிறோம். கலைஞன் வாசிக்காவிட்டால் கூட, யாழ் யாழ்தான்; அது போலவே, பட்டை தீட்டாவிட்டாலும் வைரம் வைரம் தான். உன்னதக் குறிக்கோளுடன் இன்று நம் வசம் உள்ள ஒரே நிறுவனம் ஐ.நா.வாகும். அதன் தோல்விகளும் பல வீனங்களும் அந்த நிறுவனத்தின் அவசியத்தையோ,முக்கி யத்தையோ குறைக்கவில்லை; குறைக்கவும் முடியாது. அதே சமயம். சுற்றிலும் விபரீத எண்ணங்களும், அணு ஆயுதங் களும், பேராசைக் கண்களும் ஆக்கிரமிப்பு நோக்கமுங் கொண்ட நாடுகள் வஞ்சகப் பேச்சாலும் மிரட்டலாலும் மற்ற நாடுகளை அடிமைப் படுத்த நினைக்கும் நாடுகள்- நிறைந்திருக்கையில் இந்த நிறுவனம் அமைதிக்காகவே திட்ட மிட்டு அமைதிக்காகவே விண்ணப்பம் விடுக்கிறது என்றால் இந்தக் காட்சி எல்லோருக்கும் பெருமதிப்பைக் கொடுப்பதா கும். படைக்கலங்களும் படை அணிவகுப்புகளும், படை தலைவர்களும், ராஜதந்திரிகளும், அணுகுண்டுகளும், ஹைட் ரஜன் குண்டுகளும் நிறைந்த ஓர் உலகத்தில் ஐ. நா , செய ணற்றி வருகிறது. வினோதமான காட்டுமிராண்டி நாடுகளில்