பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

18 ஞானிகள் அவதிப்படுவது போல் ஐ.நா.அவதிக்கும், அவ மானத்திற்கும். அவதூருக்கும், தூஷணைக்கும் இலக்கா. கிறது. ஆயினும், காட்டு மிராண்டியை நாகரிசுப்படுத்துவ தற்கும் கோபக்காரர்களைச் சாந்தப்படுத்துவதற்கும், பேராசைக்காரர்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற் கும், இவர்களுக்கெல்லாம் அமைதியும் நீதியும் நிறைந்த வழியைக் காட்டுவதற்கும் ஐ. நா. விடாமல் முயன்று வருவது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். தனது முயற்சி கள் அனைத்திலும் ஐ. நா. வெற்றி அடைந்து விடவில்லை. ஐ.நா. வைக் கேவலமாக நடத்தும் தென்னாப்பிரிக்கா, ரொடீஷியா,போர்ச்சுக்கல் போன்ற நாடுகள் சிலவும் இருக் கத்தான் செய்கின்றன. ஆனால் ஐ. நா. பின் வாங்க மறுக் கிறது: மனித மனத்தில் இயல்பாச உள்ள கண்ணியத்தைத் தூண்டுவதற்கு அது நம்பிக்கையோடு முயன்று வருகிறது. அரியதொரு சேவை ஆர்வத்துடன் இந்த நிறுவனம் சென்ற 22 ஆண்டுகளாக உலக சமாதானக் கொடியைத் தூக்கிப் பிடித்து வந்திருக்கிறது. ஐ.நா. முதன் முதலில் நிறுவப்பட்டபோது நெடிய நோக்கில்லா மக்கள் உலக சமாதானத்துக்கு ஒரு நிறுவனம் ஏற்படுவது என்ற கருத்தையே ஏளனம் செய்திருக்கக்கூடும். பழைய சர்வதேசச் சங்கம் தோன்றி மறைந்த வேதனைமிக்க கதையின் நினைவுகள் அப்போது நிழலாடிக் கொண்டிருந்தன.. சர்வதேசச் சங்கம் தோல்வியடைந்திருந்துங்கூட நிதானமும், ஆத்மீக உணர்வும் கொண்டு பெரியோர்கள் இரண்டாவது உலகப் போரால் சீர்குலைந்திருந்த ஓர் உலகத்தில் ஐ.நா. ஸ்தாபனத்தை நிறுவுவதற்குக் கூடினார்கள் என்றால் அது. வியப்புத்தரும் விஷயம்தான். உண்மையில் ஐ.நா. பல நாடு களின் தலைநகரங்களுடைய சிதைவுகளின் மேல் நிறுவப்பட்ட தாகக் கூடச் சொல்லலாம். பிணங்களும், நடைப் பிணங் களும், ஊனமுற்றோரும், அங்கஹீனமுற்றோரும், பார்வை இழந்தவர்களும், அனாதைகளும் இத்தகையதொரு சூழ்நிலை