பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

81 இந்நாட்டுத்தேன், எனின் கொட்டிடின் குளிர்ச்சியா காண்போம்? பிறநாட்டுத் தேன், எனின் பருகிடிற் கசப்போ இருந்திடும்? எங்கிருந்து கிடைத்திடினும் ஏற்புடையதெனின், எம் தாக்கிக் கொள்வோம் என்ற நோக்கம் தெவை; அதனைத் தந்திடவும் அதன்மூலம் பயன் கண்டிடவும் இணைந்து பணி யாற்றிட வேண்டும். கத்துகடல் மூழ்கி முத்தெடுத்தோர் தந்தையின் கழுத்திலா கட்டுவர்? பல்கலைக் கழகங்கள் வளர்ந்துள்ளன, வளருகின்றன. கல்விக்கூடங்கள் பெருகி வருகின்றன. எனினும் இன்றும் மக்கள் தொகையுடன், பட்டம் பெற்றோர். தொகையினை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எத்தனை சிறிய அளவினது நமது முன்றேற்றம் என்பதனை உணரலாம். எனவேதான் நாட்டு நிலை உயர்ந்திட, நல்லோர் மிகப் பலருக்கு கிடைத்திடர் வாய்ப்பை பெற்றுள்ள உம்மிடம் மக்கள் நிரம்ப எதிர்ப்பார்க்கின்றனர். நீவீர் இந்நாட்டை சூழ்ந்துள்ள இல்லாமை, போதாமை, அறியாமை, கயமை என்னும் பகையினை வீழ்த்திடப் புறப்படும் முன்னணிப் படையினர்: பட்டந்தனைக் காட்டிப் பாங்கான வாழ்வு பெற முந்திக் கொள்ளும் நிலையினர் என்ற நிந்தனையை நீக்கிடுக! நீள் வெற்றி பெற்றிடுக! என வாழ்த்துகின்றேன். பட்டம் பெற்றிடுவோர் குறிக்கோளற்றுக் கிடந்திடின். நாடு குலையும்; எதிர்காலம் எழில் உள்ளதாக அமையாது. குறிக்கோளற்ற நிலையே மனக்குழப்பம், கொதிப்பு, அதிர்ச்சி, ஆர்ப்பரிப்பு, ஒழுங்கற்ற செயல்கள்: ஊறு விளைவிக்கும்