பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

3.7. உலகுடன் ஒட்டி வாழ்ந்திட, உலகின் அறிவுக் களஞ் சியத்தின் துணைபெற ஆங்கிலமொழியறிவு இன்றியமையாத தாகிறது. இந்தியாவின் பல பகுதிகளுக்கு இணைப்பு மொழியா கவும், இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் இணைப்பு மொழியாகவும் இருந்திடட்டும் ஆங்கிலம் என்பதனை நாட்டுப்பற்று அற்றதன்மை என்றும் கூறுவாறுளர்.கூறுவார் என்று மட்டுமே குறிப்பிட்டேன். கருதுவார் என்று கூற வில்லை. காரணத்தோடு! ஆங்கிலம் முன்பு ஆதிக்கம் செலுத்தியவரின் மொழி என்பதாலே, அதனை இணைப்பு மொழியாகக் கொள்வது தேசியத் தன்மானமற்றது என்று கூறுபவர் அந்த ஆங்கில நாட்டுப் பணத்தைக் கடனாகவும் இனாமாகவும் பெற்றுத் தொழில் வளர்த்திட முனைவதை, தேசியத் தன்மானத்தைக் கெடுப்பது என்று கூறிடக் காணோம். தொழில் நுட்ப அறிவு பெற்றிட ஆங்கிலேயரின் துணை தேடும்போது, இந்தப் பேச்சு எழக்காணோம்! மொழி பற்றி மட்டும்தான் இப்பேச்சுப் பேசுகின்றனர். என்வேதான், அவர்கட்கு ஆங்கிலம் கூடாது என்ற கருத்தில்லை -கூறமட்டும் செய்கிறார்கள் என்றுரைத்தேன். அன்று புறப்பட்டது வேந்தர் படை; இன்று புறப்படுவது அறிவுப்படை! ஆங்கிலம் கூடாது என்று கூறுவதுடன், இந்தியே இணைப்புக்கு ஏற்றமொழி என்று அவர்கள் வலியுறுத்தும் போது, கூறுபுவரின் உ மை நினைப்பும் வடிவமும் நன்றாகத் தெரிகின்றன். உஓ