பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

36 கூடி வாழ்வோம்; உன்னிடமுள்ளது. எனக்கு, என்னிடமுள்ளது எனக்கு என்ற மூறை வகுத்திடல் கூடிவாழ்வதாகாது. ஆட்டுக்குட்டியைத் தின்றுவிட்ட ஓநாய் "என்னோடு ஒன்றாக ஆடு இணைந்துவிட்டது. நாங்கள் இணைபிரியாச் சோதரர் ஆகிவிட்டோம்!" என்று கூறுவது போன்ற முறை யில் “ஒற்றுமை" வேண்டுவோர் நடந்திடக்கூடாது என்ப தனை அறிவுறுத்த வேண்டும். 2 பட்டம் பெற்றோரே! உமது தெளிவுரை கிடைத்து மக்கள் இதுபோன்ற விளக்கம் பெற்றிட வேண்டும் என் விழைகின்றேன், அறியாமை, வறுமை, ஆகியவற்றினை ஓட்டிடும் ஆற்றல். படை திரட்டிடப் பல்கலைக் கழகம் ஏற்ற இடம் என்பதால் இவற்றினை விரித்துரைத்தேன். பயிற்று மொழி,பாடமொழி, ஆட்சி மொழி, இணைப்பு மொழி என்ற சொற்றொடர்கள் வேகமாக உலாவிடக் காண் கின்றோம். "தாய்மொழி' என்னும் தகுதிக்கு ஈடாகவேனும் எந்தத் தகுதியையும் ஒருமொழி பெற்றிடத் தேவையில்லை. ஆயினும் நமது தமிழ்மொழி, நமது தாய்மொழி என்ப தால் மட்டுமன்று. வளமிக்கது என்பதாலும் எவரும் வியந்து பாராட்டத்தக்கதாகிறது. அந்த வளம் கெடாம லும், மேலும் வளரவுமான செயல்களைச் செம்மையாக்கித் தருவது உமது கடமையாகும். தமிழ், ஆட்சிமொழியாக எல்லாத் துறைகளிலும் திகழ் வைதற்கான சூழ்நிலையை உருவாக்குவதில் வெற்றி பெற்றிட உமது நல்லார்வம் நிரம்பத் தேவை.