பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

35 ஆனால், அதே வரிசையில் வசீகரப்பூச்சுகளுடன், மயக்கமூட்டத் தக்க பேச்சுகளையும் குறிக்கோள் என்ற பெயரால் நிற்கவிடுகின்றனர். தெளிந்து அறிதல் வேண்டும். நாட்டிலே ஒற்றுமை வேண்டும்-இது குறிக்கோள்- அனைவரும் ஏற்கத் தக்கது; இதன் வெற்றிக்காக அரும்பணி யாற்றுவது மாணவர் கடன். “நாட்டின் ஒற்றுமைக்காக --உன்மொழி, உன் மரபு அழிந்திடவும் ஒருப்படவேண்டும்; பிற மொழியின் ஆதிக் கத்தை ஒப்புக்கொள்ளவேண்டும்;"-இஃது அறிவுள்ள எவரும் ஏற்க முடியாதது. தன்மானமுள்ள எவரும் எதிர்த் தாக வேண்டியது. இதனை இலட்சியம் என்றோ திட்டம் என்றோ கூறுவது, வட்சியம் என்பதற்குக் களங்கம் தேடுவதாக முடியும். நாட்டுப் பொதுச்செல்வம் நாளும் வளரவேண்டும். அதற்கான முறையில் அனைவரும் உழைத்திட வேண்டும்- இஃது எல்லோரும் ஒப்புக்கொள்ளத்தக்க லட்சியம். ஆடுகின்ற ஓநாய் கூறுவதுபோல நாம் நடந்திடக் கூடாது நாட்டுச் செல்வம் பெருகட்டும்; அது நாலாறு பேர் களிடம் சென்று சிக்கிக்கிடப்பினும் கவலைவேண்டாம் என்று ரைப்பது, லட்சியமாகாது-அதனைக் கேலிக்கூத்தாக்குவ தாகும், கூடிவாழ்ந்தால் கோடி இன்பம். இனிய எளிய லட்சியம்.