பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

சுருங்கிய உலகம் முன்பெல்லாம் காசிக்குப் போகிறேன், திருப்பதிக்குப் போகிறேன் என்பார்கள். இப்படி இருந்த இந்த நாட்டில் வாரத்துக்கு வாரம், மாதத்துக்கு மாதம் அமெரிக்கா போகி றேன் - - ரஷ்யாவுக்குப் போகிறேன் என்று கூறப்படுவதைக் கேட்கிறோம் - நம்நாடு எந்த அளவு முன்னேறியுள்ளது என் பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டாகும். காசிக்குப் போகிறவர்களிடம் மறக்காமல் கங்கா தீர்த்தம் கொண்டு வாருங்கள் என்பார்கள். பழனியாயிருந் தால் பஞ்சாமிர்தம் கொண்டு வரும்படிச் சொல்லுவார்கள். ரஷ்யாவுக்குப் போகும் நமது நண்பர்களிடம் நாம் என் னென்ன கேட்போம். எப்படி அந்த நாட்டில் ஆட்சி அமைந் துள்ளது? அங்கு மாநகராட்சிகள் எப்படி அமைந்துள்ளன? எப்படி அந்த நாட்டுக் குழந்தைகள் எந்த அளவு மகிழ்ச்சி யோடு இருக்கின்றன? இதையெல்லாம் தெரிந்துகொள்ள நாம் விரும்புவோம். உலகம் எப்படி நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள நம்மிடம் நிரம்ப ஆர்வம் உள்ளது. பக்கத்து வீட்டுக்காரன் எப்படி இருக்கிறான் என்பதைக் கூடத் தெரிந்து கொள்ளாதது. பழைய காலப் பழக்கம். இன்று நெடுந்தூரத்து நாடுகளானாலும் அங்கே மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை நேரில் தெரிந்து கொள்ள விழைகிறோம். அந்த நாட்டில் என்னென்ன விந்தைகள் உள்ளன என்பதை அறிய விரும்புகிறோம். அத்தனை ஆர்வம் உள்ளது.