பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

41 முன்னாள் மேயர் முனுசாமி ஏற்கெனவே ரஷியாவுக்கு சென்று வந்தவர். சிட்டிபாபுவும் அயல் நாடுகளுக்குச் கழக அமைப்புச் செயலாளர் என்.வி.நடராசன் தற்போது மலேசியா பயணம் மேற் கொண்டுள்ளார். சென்று வந்திருக்கிறார். பாராளுமன்றக் கழக உறுப்பினர் மனோகரன் இரண்டு முறை ஆப்பிரிக்கா நாடுகளைச் சென்று பார்த்துவிட்டு வந் துள்ளார். மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரான ராஜா ராமும் உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்துள்ளார். நானும் ஜப்பான் வரை சென்று வந்திருக்கிறேன். அங்கு. காணுகின்றவற்றை-தெரிந்தவகையில் புகுத்தலாம் என் பதை நம்மவர்கள் தெரிந்து சொல்ல இந்த அயல் நாட்டுப் பயணங்கள் துணையாக இருக்கும். உலகம் சுருங்கிவிட்டது உலகம் சுருங்கி வருகிறது. உலக நாடுகள் நெருங்கி வரு கின்றன. 25 வருடங்களுக்கப்பால் மிஞ்சிப் போனால் 50 வருடங் களுக்கப்பால் இங்கிருந்து சந்திர: மண்டலத்துக்கு ஒருவர் போகிறார். அவருக்கு வழியனுப்பு விழா என்று இதே இடத் தில் நிச்சயம் நடக்கும். நாடுகள் மட்டுல்ல, அண்டங்கள் ஒன்றை ஒன்று நெருங்கி வரும் காலம் இது. ரஷ்யா என்றாலே குனிந்தவன் நிமிர்ந்து நிற்பான்; அழுது கொண்டிருப்பவன் முகத்தில் புன்முறுவல் பூக்கும்; பாட்டாளி தனக்கொரு நாடு அமைந்ததாக நினைப்பான். உலகத்துக்கே புதிய செய்தியை புதிய நடைமுறையைக் கொடுத்த நாடு ரஷ்யா. அப்படி இந்த நாடு புகழெய்திடக் காரணம் என்ன?" கொடுங்கோன்மையை வீழ்த்திப் பயங்கரப் புரட்சிக்குப்