பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

பின் பாட்டாளிகளது அரசை அவர்கள் அமைத்தார்கள். அப்படி அரசு அமைத்த பிறகு மக்களோடு நெரூக்கமான தொடர்பு கொண்டு தோழமை உணர்ச்சியோடு செயல் பட்டனர். வீணையொன்று நல்ல நாதம் தரவேண்டுமென் றால் அதன் நரம்புகளில் சில அறுந்தும், சில வளைந்தும் இல் லாமல் எல்லாமே ஒரு சீராக இருக்க வேண்டும்--அறுந்தும் வளைந்துமிருக்குமானால் எந்தப் பெரிய வித்துவான் ஆனாலும் வாசிக்க இயலாது. சீராக இருந்து நல்ல நாதம் எழுப்பும் வீணையைப்போல் ரஷியாத் தலைவர்கள் ஒற்றுமையாக இருந்து, ஜார் கொடுங் கோன்மையை ஒழித்துப் புதிய அரசை நிறுவினர். நினைத் தாலே பொசுக்கிவிடும் கொடுங்கோன்மை அது. சோவியத் நாட்டுக்கும் நமக்கும் நிறைந்த தோழமை நிலவுகிறது. பெரிய தொழில் திட்டத்துக்கு நிரம்ப ஒத் துழைத்து வருகிறார்கள். அவர்களது ஒத்துழைப்போடு அரக் கோணத்துக்குப் பக்கத்தில் பெரிய தொழிற்சாலை ஒன்று ஏற்பட இருக்கிறது. அவர்களிடகிருந்து நமக்கு தல்ல நூற் துழைப்புக் கிடைத்து வருகிறது. தோழர்கள் செல்லவிருக்கும் வெளிநாடு அன்னிய நாடே என்றாலும், நம் அன்மையபெற்ற தோழமை நாடு . 4