பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

சீர்மிகு சீரணி வீட்டுக் கிணற்றிலே நீர் இறைத்துக் கொடுக்க முடி யாதவர்களும் கூட தேர் இழுக்கச் செல்வார்கள். தேர் இழுக்க முடியாதவர்கள் தங்கள் கைகளில் பெரிய விசிறிகளைப் பிடித்துக் கொண்டு தேர் வடத்தைப் பிடித்து இழுப்பவர்களுக்கு விசிறுவார்கள்-காற்றுவராது; சில நேரங் களில் விசிறி தேர் இழுப்பவரின் முதுகைத் தாக்கும். விசிறி யது போதும் நிறுத்து என்று சொல்லுவார்கள். ஊருக்குழைப்பது என்ற இயற்கைப் பண்பை ஒன்று. படுத்த வேண்டும்; இன்னின்ன பணிகளை மேற்கொண்டால் நல்ல பலன்களைக் காணலாம் என்ற உணர்வை ஊட்ட வேண்டும். தேவையான கருவிகளைக் கொடுக்க வேண்டும்; சரளைக் கற்கள்-உருளைகள் கிடைக்க வில்லையென்றால் அவை கிடைக்கச் செய்ய வேண்டும்; இவைகளுக்கெல்லாம் சர்க் கார் அதிகாரிகள் ஒத்துழைக்க முன் வரவேண்டுமென நான் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நேரு இத்தகைய பொதுநலத் தொண்டு குறித்துக் கனவு கண்டார். 20 வருடமாக மக்கள் தான் உழைத்திருக்கிறார் கள். காரணம் தெரியாமலே உழைத்திருக்கிறார்கள். யாருக் காக உழைக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமலே உழைத்திருக்கிறார்கள். பலனென்ன என்று தெரியாமலே உழைத்திருக்கிறார்கள். நமக்காக நம் குடும்பத்துக்காக உழைக்க வேண்டும். மீதமிருக்கும் நேரத்தில் ஊர் நன்மைக்காக உழைக்கவேண். டும்.