பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

சுதந்திரத் திருநாள் இதுவரைக்கும் சுதந்திர நாள் விழாக்களில் அமைச்சர் கள் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த அமைச்சர்கள் 1967 தேர்தலுக்குப் பிறகு பதவி நீங்கிய காரணத்தால் இந்த சுதந்திர விழா அமைச்சர்கள் இல்லாமலேயே நடை பெறுமோ என்ற அச்சம் இந்த விழாவின் மூலம் நீக்கப்பட் டிருக்கிறது. யார் அமைச்சர்களாக வந்தாலும்-நாட்டின் சுதந்திர நாள் கொண்டாடப்படும்; அந்த விழாவில் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள் என்பதைக் காட்டத்தான் சுதந்திர நாள் விழாவில் இந்த அமைச்சரவை கலந்து கொள்கிறது. நாங்கள் ஏன் சுதந்திர நாளைக் கொண்டாடுகிறோம் என்ற ஐயப்பாட்டிக்கு நான் தரும் இந்த எளிய விளக்கமாகிலும் புரியும் என்று நம்புகிறேன். இப்படியொரு சுதந்திரநாள் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்பது எனது இருபதாண்டுகால ஆனச 1947ஆம் ஆண்டே - அன்று நான் இருந்த கட்சித் தலைமைக்கு எதிராகச் சுதந்திர நாள் கொண்டாடப்பட வேண்டியதுதான் என்று எழுதிக் கோபதாபத்திற்கெல்லாம் ஆளாக்கப்பட்டேன். அப்போது சுதந்திர நாள் விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று எண்ணமிருந்தாலும், அப்போது கலந்து கொண்டிருந்தால் சாதாரண அண்ணாத்துரையாகத்தானே கலந்துகொள்ள. வேண்டியதிருக்கும். ஆனால் இன்று முதலமைச்சர் என்ற முறையில் கலந்து கொண்டாலும்; 20 ஆண்டுக்கால ஆசைக் கனவு நிறைவேறுகிறது என்ற மனநிறைவு எனக்கு ஏற்பட் டிருக்கிறது.