பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இந்தத் திருநாளில் சுதந்திரப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தோருக்கும்-உயிர்த்தியாகம் செய்யா விட்டாலும் பல தியாகத் தழும்புகளை ஏற்று உயிர் வாழ்ந்து கொண்டு - வதைப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண் டிருக்கும் எண்ணற்ற தியாகிகளுக்கும் நமது மனம் நிறைந்த மரியாதையை பேரம் பேசாத மரியாதையை - பயன் கருதாத மரியாதையைத் தெரிவிக்கிறேன். தென்னை மரத்தின் அடியில் (தாளில்) சாதாரணத் தண்ணீர் ஊற்றினாலும் அதன் உச்சி சுவைமிக்க இள நீரைத் தருவதுபோல் அந்தத் தியாகிகள் எதையும் எதிர் பாராமல் பணிபுரிந்து - நம்மை யெல்லாம் தலைநிமிர்ந்து நடக்கச் செய்தார்கள். இத்தகைய தியாகிகளுக்கு மரியாதை செய்வதில் தி. மு. கழகம் என்றும் தயக்கம் காட்டியதில்லை; காட்டப் போவதுமில்லை! 24 நாட்டிலே ஆட்சி ஒரு கட்சியிடமிருந்து இன்னொரு கட்சி யிடம். செல்லலாம். தலைமையிலே மாறுதல் வரலாம். ஆனால் சுதந்திரம் என்றென்றும் நிரந்தரமானது. சுதந்திரத் தைப் போற்றுவது பேச்சினால் மட்டுமல்ல; செயலினாலும் இருக்க வேண்டும்; ஒரு நாளில் ஒரு விழாவில் மட்டுமல்ல! எல்லா நாட்களிலும் போற்றப்படுவது, விரும்பி வரவேற் கப்பட வேண்டியது. யார் கட்டளையிட்டார்கள் சிதம்பரனாருக்கு செக் கிழுக்கும் துன்பம் ஏற்கும் காரியத்தைச் செய்யச் சொல்லி யாரும் கட்டளையிடவில்லை: திருப்பூர் குமரனுக்கு, "போலீஸார் குண்டாந்தடியால் அடிப்பார்கள்; ரத்தம் குபுகுபு என வரும் போ! - என்று யார் கட்டளையிட்டார்கள்? யாரும் கட்டளையிடவில்லை! உள்ளத்தில் ஏற்பட்ட ஓர் உணர்ச்சி- தூய உணர்ச்சி- தூய ஒரு நோக்கத்திற்காக அவ்விதம் செய்யச் சொல்