பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

63 சீக்கியர் கடின உழைப்பாளிகள். நான் இங்குமட்டுமல்லா மல் தூர கிழக்காசிய நாடுகளில் கண்டவரை சோம்பேறி 'என்று சொல்லிடத் தக்க ஒரு சீக்கியரையேனும் காண முடியவில்லை. பணி தனக்கென மட்டுமல்லாமல் சமுக முழுமையும் அதன் மூலம் நாடுமுழுமையும் பயனடைய வேண்டும் என்ற மனோ நிலையுடனே அவர்கள் பணி செய்கின்றனர். தமிழர் களாகிய நாங்களும் அத்தகைய உயர்ந்த கோட்பாடுகள் உடையவர்களாயிருந்தோம். சமுதாயத்தொண்டே தமிழர் பண்பாட்டின் மையமாக விளங்கிற்று. இதனால் தான் தமிழகம் சீக்கியர்களை அணைத்துச் செல் கின்றது. சீக்கியப் பிரமுகர் 'எங்கள் குழந்தைகளெல்லாம். இங்கே தான் பிறந்தன" என்றார்! ஒன்றைச் சொல்கிறேன் குழந்தைகள் மட்டுமல்ல, பேரன்களும் கொள்ளுப் பேரன் களும் இங்கேயே பிறக்கட்டும். அக்குழந்தைகளெல்லாம் சுவாசிக்கிற முதல் காற்று தமிழ் மணங் கமழும் காற்றாக இருக்கட்டும். தமிழ் மண்ணில் அவர்கள் தவழட்டும்.நிரந்தர மாக இங்கேயோ இருக்கலாம். வேறு சில சமூகத்தாரைப் போல் கவலைகொள்ளத் தேவையில்லை. சீக்கியர் வீரம் சீக்கிய நெறி சுரண்டலை அனுமதிப்பதில்லை; பிறர் உழைப்பின் பலனைக் கொண்டு வாழுவதை அனுமதிப்பதில்லை. எனவே சீக்கிய நண்பர்களின் உறவு தமிழ் மக்களுக்கு மதிப் பளிக்கும் ஓர் உறவாகும். என்றேனும் ஒரு நாள் தமிழ் சீக்கிய பண்பாடுகள் இணைந்தியங்கிட வகை காண்போம். சீக்கிய மக்களது வீரம் போற்றற்குரியது. நாட்டின் எல்லையிலே அவர்கள் வீரத்தோடு எதிர்த்து நின்றிரா விட் டால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று எண்ணவே இயலவில்லை. சீக்கியரது வரலாறு புகழுடையதாக இருந்திருப்பின் அவர்