பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

களது வருங்காலமும் மேலும் சிறந்த புகழுடன் இருக்கும். தமிழக அரசு அவர்களுக்கு ஏதேனும் உதவியாக இருக்க முடியுமென்றால் அதைச் செய்திட நான் தயங்க மட்டேன். சீக்கிய சமயத்தின் மீது எனக்குள்ள உயர்மதிப்பே இதற்குக் -காரணம்! அமிர்தசரஸ் கோயிலின் மாடங்களிலே உள்ள ஓவியங் களைப் பார்த்திருக்கிறேன். சீக்கிய சமுகமானது எத்தனை துன்பங்களைத் தாங்கி இன்னல்களைக் கடந்து வந்துள்ளது என்பவற்றையெல்லாம் அந்த ஓவியங்கள் சித்தரிக்கின்றன. அயரா உழைப்பின் மூலம் அவர்கள் இன்றைய மேம்பா டான நிலையை அடைந்தார்கள். தற்காலத் தமிழ் மக்களும் சீக்கியரைப் போன்ற நல்ல பண்புகளைப் பெற வேண்டு மென நான் விழைகிறேன். தமிழர் சமயம் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதே பண்டைத் தமிழ் மக்களின் சமய நெறியாக இருந்தது. சாத்திரச் சடங்கு கள் அங்கிருக்கவில்லை. மூடப்பழக்க வழக்கங்கள் இருந்த தில்லை. சீக்கியர் நெறியைப் போலவே தமிழர் நெறியிலும் விக்கிரகங்களுக்கு இடமில்லாதிருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கே வந்ததாகக் கற்பனை செய்து பார்த்தால் இங்கே இருந்த சமயமும் ஒன்றாகவே இருப்பதை அறிவோம். கடவுள் பக்தி இல்லாத என்னை இங்கு அனுமதித்தது பற்றி இங்கு நாளை எவரேனும் கேட்கக்கூடும். மனிதன் மற்றெல்லாவற்றுக்கும் முதன்மையானவனாகவும் கடவுளைத் தவிர வேறு எவருக்கும் மனிதன் அடிமையாகிடத் தேவை யில்லையென்றும் சமயம் கூறுமானால் நான் நூற்றுக்கு நூறு சமயவாதியே, இதைவிட்டு தனி மனிதருக்குள் கீழ்சாதி மேல் சாதி என்று ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கக்கூடியதாக சமயம் இருக்குமானால் அது நடவாது.