பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

65 மனிதனைப் பாகுபாடு செய்திடுவதே கடவுள் நெறி என்று எவரேனும் சொல்லுவார்களானால் நான் நாத்திகனே என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். சமய நெறி என்பது புனிதமானது. உண்மையானது, மனிதாபிமானமுள்ளது. அடக்க உணர்வை சோதிப்பது. என்றால் என்னை சமயத்துக்கு அப்பாற்பட்டவனென்று எவரும் சொல்லிவிட இயலாது. என்னை நாத்திகனென்று கூறுவார்க்கு நான் கூறவிரும்புவது இதுதான். இந்தியா ஒன்றுபட்டிருக்க வேண்டும். அதன் வலிவு வெல்லற்கரியதாக் இருக்கவேண்டும் என்று நாமெல்லாம் விரும்புகின்றோம். இந்த ஒற்றுமையை ஏற்படுத்துவதெப் படி. சட்டத்தின் மூலமோ, கட்டளையின் மூலமோ, குடி யரசுத் தலைவரின் உத்தரவின் மூலமோ ஒற்றுமையை ஏற்படுத்திட முடியாது. ஒற்றுமை என்பது உள்ளம் சம். பந்தப்பட்ட ஒன்றாகும். நமது எண்ணங்கள் ஒன்றிணைந்திட செயல்பட வேண்டும்; வெறும் உதட்டளவுப் : பேச்சினால் ஒற்றுமை வந்துவிடாது. ஒற்றுமையை வளரும். பசுஞ்செடிக்கு நிகராகக் கருதி ஒரு சீராகத் தண்ணீர்விட்டுப் பேணி வந்தால் மட்டுமே. அது வளரும். அதைவிட்டுத் தண்ணீரும் வெந்நீரும் மாற்றி மாற்றி ஊற்றினால் செடியின் நிலை என்னவாகும்? தமிழக அரசு கொண்டுள்ள மொழிக் கொள்கையை சென்னைவாழ் சீக்கியர் ஆதரிப்பதாக பிட்டார். அது உள்ளது-சங்கத் துணைத்தலைவர் குறிப் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கே தமிழ் நாட்டில் பொதுவாகவே ஒரு தப்பெண்ணம் நிலவு கிறது. வடக்கேயிருந்து வருகிறவர்களெல்லாம் இந்தி தனி’ யொரு ஆட்சி மொழியாவதை ஆதரிப்பவர்கள் என்ற எண்ணமே. அது சரியல்ல-சீக்கிய மக்கள் தங்கள் குர்முகி மொழியை எந்த அளவு நேசிக்கிறார்கள் என்பதையும் அறி வேன் - அதேபோல அசாம் மொழி எப்படி அசாமியர்களால் நேசிக்கப்படுகிறதென்பதையும் அறிவேன்..