பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

75 கருத்து வேறுபாடுகள் இருப்பினும் ஒருவரை ஒருவர் மதிக்கும் ஜனநாயகப் பண்பு வளர்வதற்கு காங்கிரஸ் தலைவர்கள் உதவ வேண்டும். சைவர்களும் வைணவர்களும். கண்டையிட்டுக் கொண்ட நிலைபோய் இப்போது இருவரும் ஒரே வீட்டில் சூடி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உணர்வை உருவாக்க முன்நிற்க வேண் டும். பக்தவத்சலம் தம்முடைய கட்சிக்கு மட்டும் அல்லா மல் எல்லாக் கட்சிக்கும் கருத்துக் கூறும் ஆற்றல் பெற்றவரா வார், பைபிளைப் படித்து விடுவதாலே நாம் கிறிஸ்தவர்களாகி: விடுவது இல்லை. காங்கிரஸ் தலைவர்களாக இருப்பவர்கள். தான் காங்கிரஸ் வரலாற்றை படிக்கவேண்டும் என்பதில்லை. எனக்குத் தெரிந்த வரை காங்கிரசிலே இருப்பவர்களை விட நாங்கள் அதிகமாக அறிந்து இருக்கிறோம். ஏன் என்றால் எந்த இடத்தில் ஓட்டை இருக்கிறது என்பது அப்போது தான் தெரியும். நான் பொறுப்பு ஏற்றதும் தனித் தனியாக டைரி எழுத. ஆரம்பித்தேன். இப்போது ஒரு டைரிதான் மிஞ்சி இருக் கிறது. ஐந்து டைரி எங்கே என்று தெரியவில்லை டைரி எழுதி. எனக்குப் பழக்கம் இல்லை. அந்தப் பழக்கம் இல்லாததால் தான் தமிழ்நாட்டின் முழு வரலாறு நமக்கு கிடைக்கவில்லை... திருவள்ளுவர் எந்த ஊர் என்று இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. டாக்டர் வரதராஜலு-திரு.வி.க. போன்றவர்கள் வரலாறு சரியாக எழுதப்படவில்லை. பக்தவத்சலம் அவர் களின் நாற்பது - ஐம்பது வருட காலமாக தொடர்பு கொண் டிருந்த அரசியல் வரலாற்றை உருவாக்கினால் படிப்பகத் தீற்கு சிறந்து நூல் கிடைக்கும்.