பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74 பக்தவத்சலம் சட்டமன்றத்தில் இருந்த காலத்திலேயே எங். களோடு இருந்த காலத்தில்தான் அதிகமாக.. மகிழ்ச்சி: அடைத்து இருக்கிறார். அவருக்குள்ள பெரியகுணம் அவர் ரொம்ப அழுத்தக்காரர். என்று சொல்வார்கள். சட்ட மன்றத்தில் நாங்கள் மணிக்கணக்கில் பேசுவோம். அதிலே சில இடங்களில் கோபத்தை வெளிப்படுத்துவோம். வேண்டு கோளைத் தெரிவிப்போம். எல்லாம் முடிந்த பிறகு பக்தவத் சலம் அவர்கள் என் நண்பர்கள் சொல்லியன ஏற்றுக் கொள் வதற்கு இல்லை என்று ஒரு வரியில் சொல்லி விடுவார். அப் போதும் அவர் கசப்பு உணர்ச்சியை காட்டியது இல்லை. மேடையில் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்த பொழுது கைதட்டலும் சிரிப்பொலியும் எழுந்தது. எதையோ காணக்கூடாத காட்சியை கண்டதுபோல ஜன' நாயகத்தில் பல கட்சிகள் இருக்கும். இருக்கவேண்டும். சர்ச்சில் பிரதமராக இருந்து ஒருமுறை தேர்தலில் தோற்றபோது அட்லி பிரதமராக வந்தார். வழக்கப்படி பிரதமர் பத்தாம் எண்ணுள்ள வீட்டுக்கு குடிபோனபோது பழைய பிரதமர் சர்ச்சிலின் மனைவி அந்த வீட்டின் அமைப்பு. களை எது எது எங்கு இருக்கும் என்று விளக்கிக் கூறுகிறார். அந்த மனப்பான்மை நமக்கு வராது என்று கருதினால் நாம் ஜனநாயகத்திற்கு வாயக்கில்லாதவர்கள் என்றாகிவிடும். அட்லியும் - சர்ச்சிலும் ஒரே மா நாட்டில் கலந்து: கொள்ளச் சென்றபொழுது மற்றவர்களுக்கு விவாதத்துக்கு உரியதாக இருந்தது. இருவரும் செல்வதை முறியடிக்க: எடுத்துக்கொண்ட முயற்சிகள் தடுக்கப்பட்டு : இருவருமே அந்த மாநாட்டில் கலந்துகொண்டார்கள். ஜனநாயகத்தில் அந்த நாடு எவ்வளவு சிறந்து இருக்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இதுபோன்ற விழா மட்டுமல்லாமல் பொதுவாக முயற்சி கள் எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.