பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

கணக்கு அது? சுதந்திரம் பெற்றோம்; 20 ஆண்டுகள் உருண் டோடிவிட்டன. நாம் அடிமையாயிருந்த காலத்தில் வெளிநாட்டார், இந்தியா தங்கச் சுரங்கம் நிறைந்த நாடுதான்.மாடு சுட்டிப் போரடித்தால் போதாது என்று சொல்லி யானை கட்டிப் போரடித்த வளம்மிக்க நாடுதான். இருந்தாலும் அங்கே வறுமை இருக்கிறது; அறியாமை இருள் இருக்கிறது; இல்லாமை இருக்கிறது; போதாமை இருக்கிறது - காரணம் வெளிநாட்டார் ஆட்சியிருக்கிறது - என்று பிற நாடுகள் எல்லாம் நம்மிடம் பரிவு காட்டின. ஆனால் சுதந்திரம் பெற்று 20 ஆண்டுக்காலம் ஆன் பிறகு நம்மை நாமே ஆளுகிறோம் என்ற நிலை ஏற்பட்ட பிறகு - நான்கு பொதுத் தேர்தல்களை நடத்தி- மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களைப் போட்டு ஏழ்மையும் - இல்லாமை யும் - தீண்டாமையும் -கல்லாமையும் இருக்கிறது என்றால் முன்பு நம்மைப் பார்த்துப் பரிதாபப்பட்ட நாடுகள் எல்லாம் எள்ளி நகையாடத்தானே செய்யும்? ஆங்கிலேயன் தான் உன் வளர்ச்சிக்குத் தடை என்றாயே - அவன்போய் 20 வருடங்களாகி விட்டனவே; இன்னும் ஏன் வறுமையும். சுல்லாமையும் அகலவில்லை என்று கேட்கமாட்டார்களா? இதை உணருவோமானால் - அந்த நிலை போக்கப்பட வேண்டும் என்ற உறுதி பிறக்க-ஆண்டுக்கு ஒரு நாளா கிலும் -- அனைவரும் கூடிக் கொண்டாட வேண்டிய நாளாக இந்தச் சுதந்திர நாள் இருக்க வேண்டாமா? ராஜாஜி அவர்களிடம் சிறிது நேரத்திற்கு முன்பு பேசிக் கொண்டிருந்தேன். என்னுடன் முன்னாள் காங்கிரஸ் அமைச் சரும் மக்களவைத் தலைவருமான சஞ்சீவி ரெட்டி இருந்தார்