பக்கம்:உணர்வின் எல்லை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் ஒரு புரட்சியாளர்

99

என்று வள்ளுவர் எண்ணிய எண்ணமே ஒரு வகையில் அறிவுலகப் புரட்சியின் பாற்பட்டது என்று கூறலாம்.

‘புரட்சி, புரட்சி’ என்று, இன்று எவரும் எங்கும் எதற்கும் பேசக் கேட்கிறேம். ஆனால், உண்மையான—உயரிய—புரட்சி எது? அதைச் செய்ய வல்லவர் யார்? அதைச் செய்வதற்குரிய காலமும் நிலையும் முறையும் எத்தகையனவாய் இருத்தல் வேண்டும்? இக்கேள்விகட்கு விடை காண்பது அவ்வளவு எளிதன்று. என்னும், வள்ளுவர் உள்ளத்தை ஆராய்வது வாயிலாக, இவைபற்றிய உண்மைகளை ஒருவாறாகவேனும் உணரக்கூடும்.

பழந்தமிழ் மக்கள் பண்பாட்டிற் சிறந்தவர்கள்; இயற்கையோடு இரண்டறக் கலந்து இன்ப வாழ்வு வாழ்ந்தவர்கள். தலைவாயிற் கதவினுக்குத் தாளிட்டுப் பூட்டாத தறுகண்மையாளராய்—தகைமையாளராய்—அவர்கள் திகழ்ந்தார்கள். எந்த நாட்டவரையும் எந்த இனத்தவரையும் தங்கள் சொந்தமெனக்கருகி, ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’. என்ற இலட்சிய ஒளியில் வாழும் வேட்கை கொண்டவர்கள் அவர்கள். இத்தகைய பண்பு படைத்தவர்களின் சமுதாய வாழ்க்கையில் எத்தனையோ புயல்கள் வீசியிருக்க வேண்டும். அதன் விளைவாகக் கலக்கமும் சோர்வும் கண்டனர் தமிழர். அக் கலக்கத்தையும் சோர்வையும் பயன்-