பக்கம்:உணர்வின் எல்லை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் ஒரு புரட்சியாளர்

107

வானாக!’ என்று வள்ளுவர் அகில உலகையும் படைத்த ஆண்டவனுக்கே இடும் இந்தச் சாபத்தினும், வறுமை என்னும் வேதனையை வெட்டிச் சாய்க்க முற்படுவார் உள்ளத்தில் புரட்சித்தீயை மூட்ட வேறொரு தாண்டுகோலும் வேண்டுமோ?

ஜனநாயக ஒளிவீசும் அரசாட்சியை—வறுமை தொலைந்து வளமை பொங்கும் சமுதாயத்தை—காணத் துடிக்கும் திருவள்ளுவர், அவ்வாட்சியில்—அந்நாட்டில் மக்களின் தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் அறமணமே கமழவேண்டும் என்று ஆவல் கொள்கிறார். அதன் விளைவுதான் பொருட்பாலில் காணப்படும் ‘வரைவின்மகளிர்’, ‘கள்ளுண்ணாமை’, ‘சூது’ என்ற அதிகாரங்கள். இம்மூன்று அதிகாரங்களில்,—சிறப்பாக, ‘வரைவின்மகளிர்’, ‘கள்ளுண்ணாமை’ என்ற இரு அதிகாரங்களில்— வள்ளுவர் ஒரு புரட்சிக்காரர் என்ற வாய்மை தெற்றென விளங்குகிறது.

வரைவின்மகளிரை நாடுவதும், கள்ளுண்பதும் தனிப்பட்ட அறவாழ்க்கைக்கு மட்டும் கேடுபயப்பன அல்ல; பொதுவாழ்க்கைக்கும் பெருங்கேடு சூழ்வனவாகும் என்பது திருவள்ளுவர் கருத்து. உரிமையும் கடமையும் நிறைந்த பொதுவாழ்க்கைக்கு, ஒழுக்க வாழ்வு கெட்டும், கள் குடித்து மயங்கியும், சூதாடிச் சோம்பல் மிகுந்தும் திரியும் சிறியவர்களால் பெரிய கேடு என்றென்றும் விளையும் என்பதே அச்சான்றோரின் முடிவு, எனவேதான் இம்மூன்றையும் கடித்துரைக்கும் பொறுப்பினை, நாட்டின் அரசியல் எடுத்-