பக்கம்:உணர்வின் எல்லை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

உணர்வின் எல்லை

தோதும் பொருட்பாலில் மேற்கொள்கிறார் திருவள்ளுவர்.

சங்க காலச் சமுதாயத்தில் கள்ளிற்கும் வரைவின் மகளிர்க்கும் சிறப்பு வாய்ந்த இடமே இருந்தது என்பது மறைக்க முடியாத உண்மை. ‘திருவள்ளுவர் காபத்து இலக்கியங்களிலும் ‘மருதத்திணை’ என்று போற்றப்படும் பகுதியில் பாத்தையராகிய பொது மகளிர் இடம் பெற்றிருந்ததையும், மக்களுடைய அன்றாட வாழ்வில் எல்லோரும் பருகும் பொருளாகக் கள் இடம் பெற்றிருந்ததையும், அகப்பொருப்பாக களில் பரத்தையரும், புறப்பொருட்பாடல்களில் கள்ளும் பயன்றிருப்பதையும் சங்க நூல்களைக் கற்பார் எளிதில் அறிவர்.

மக்கள் வாழ்க்கையிலும், இலக்கிய பெரியிலும் இத்தகைய போக்கு ஆட்சி பெற்றிருந்த காலத்தில், இதை ஒழிக்க—நாட்டின் பொது வாழ்க்கையினின்றும் அடியோடு அகற்ற—உறுதி கொண்டார் வள்ளுவர். தலைசிறந்த ஒரு சீர்திருத்தவாதியின் குற்றமற்ற புரட்சி உள்ளத்தோடு இப்பிரச்சினையை அணுகுகிறார் வள்ளுவர். இவற்பின் தீமைகளை முதல்தரக் குடியனும், காமுகனும், சூதாட்டக்காரனும் கேட்டு வெட்கித் தலைகுனியுமாறு அவர் விளக்குகிறார்; தம் வாதத்திறமையால்–அறிவு மொழிகளால்–அவன் உள்ளத்தில் மாறுதல் உறும்படி செய்கிறார். இவ்வாறு கள்ளும், பரத்தைமையும் ‘நாகரிகம்’ என மயங்கிக்கிடந்த சமுதாயத்தில், முதன் முதலாக அவை தனி வாழ்க்கைக்கே அன்றிப் பொது வாழ்க்-