பக்கம்:உணர்வின் எல்லை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் ஒரு புரட்சியாளர்

109

கைக்கும் கேடு சூழும் எனத் தெளிந்து அறப்புரட்சி செய்துள்ளார் திருவள்ளுவர் தம் நூலில்.

தமிழ் நாட்டின் நாகரிகத்தின் பெருங்குறைபாடுகளாயிருந்த இவற்றை முதன்முதலாக ஒழிக்கப் பாடு பட்ட திருவள்ளுவர், அதற்குரிய ஆற்றல் பொருந்திய கருவியாக—தமிழை—இலக்கியத்தைப் பயன்படுத்தினார் என்று எண்ணும் போது நம் உள்ளம் கொள்ளும் உவகை சிறிதோ!

பொருட்பாலில் வரைவின்மகளிரோடு உறவு கொள்வதை வன்மையாகக் கண்டித்த திருவள்ளுவர், அந்த அறநெஞ்சோடு, காமத்துப்பாலையும் எழுதுகிறார். கற்பனைச் சிறகுகள் கொண்டு காதல்வானில் பறந்து பாடும் பறவையின் கீதம்போல விளங்கும் அவர்தம் காமத்துப்பாலிலும் மருதத்திணையில் ஊடல் பற்றிய பேச்சில்—மரபுக்காகவும் ‘வரைவின் மகளிர்’, உறவை அவர் வாழவைக்கவில்லை. இந்த உண்மையை,

‘மலரினும் மெல்லிது காமம்; சிலர்அதன்

செவ்வி தலைப்படு வார்.’

என்னும் அருமைத் திருக்குறளின் அரிய விளக்கமாக அமைந்துள்ள காமத்துப்பாலை நுணுகி ஆராய்வார் வள்ளுவர் கருத்தை எளிதில் உணரலாம்.

‘மருதத் திணையைச் சங்க நூல்களாகிய அகநானூறு முதலியவை கூறும் முறை வேறு; திருவள்ளுவரின் நூல் கூறும் முறை வேறு; திருவள்ளுவர் கூறும் மருதத்தில் பரத்தை என ஒருத்தி