பக்கம்:உணர்வின் எல்லை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்த்தும் கலை

117


                                      ‘வானத்து
வயங்கித் தோன்று மீனினும் இப்பெண்
இயங்கு மாமழை யுறையினும்
உயர்ந்துமேத் தோன்றிப் பொலிநுந் தாளே!'[1]

'ஆனாப் பெருவளஞ் செய்தோன் வானத்து
வயங்குபன் மீனினும் வாரியர் பலவென!'2

'இமயத் தீண்டி யின்குரல் பயிற்றிக்
கொண்டன் மாமழை பொழிந்த
நுண்பஃ றுளியினும் வாழிய பலவே!'3

இம்மூன்று பாடற்பகுதிகளும், முறையே முத்தமிழ் நாட்டு மூவேந்தரஇய சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் வேள்வி அந்தணர் வளர்த்த முத்தீப் போல ஒத்த உள்ளத்தினராய் ஒருங'கிருக்கும் ஒப்பற்ற ஒற்றுமைக்காட்சியைக்கண்ட ஔவை மூதாட்டியாரும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனாரும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை ஆலத்தூர் கிழாரும் வாழ்த்திய வாழ்த்துக்களாகும்.

நீல வானத்தில், மேற்குத் திசையில், பிறைசூடிய பெம்மானை நினைவு படுத்தித் தோன்றும் இளம்பிறை, கடவுளுணர்வுடைய கவிஞரும், மக்களும் கண்ணாரக்கண்டு களிகொண்டு பயனெய்த வழி வகுக்கும். இன்பப் பொருளன்றோ? அப்பிறையின்பால் ஈடுபட்ட அருந்தமிழ்ப் புலவர் மாங்குடி மருதனார்.


  1. 1-3, புறநானூறு, 367 : 15-18; 371 ; 24-25; 34 : 21-23.