பக்கம்:உணர்வின் எல்லை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் குழந்தை

157

ததை, வாளேந்திய வீரவேந்தனாகிய அவன், வாய் படைத்த கவிஞனாகவும் விளங்கியமையால் ‘குழந்தை இன்பம்’ பற்றி. அரியதொரு பாடல்—அனுபவச் சுவை நிறைந்த ஒரு பாடல்—பாடியுள்ளான். ‘குழந்தை யின்பம்’ பற்றிய மிகச் சிறந்த அச் சங்கப்பாடலை அன்றிப் புறப்பொருள் பற்றி அவன் இன்னொரு பாடலைப்பாடவே இல்லை! -

‘படைக்கப்படும் செல்வம் பலவற்றையும் படைத்துப் பலருடனே கூட இருந்து உண்ணும் உடைமை நிறைந்த செல்வத்தை உடையோராயினும், இடையே சமையம் உண்டாகக் குறுகக் குறுக நடந்து, சிறிய கையை நீட்டி, பாத்திரத்தில் கிடந்ததைத் தரையிலே இட்டும், கூடப் பிசைந்து தோண்டி,யும், வாயால் கவ்வியும், கையால் துழாவியும், செய்யுடைய சோற்றை உடலெல்லாம் படச் சிதறியும் அறிவை இன்பத்தால் மயக்கும் மக்களைப் பெறாதவர்க்குத் தரம் உயிர் வாழும் நாளில் உயிர்வாழ்வின் பயனாகிய முடிக்கப்படும் பொருள் இல்லை’—இதுவே அறிவுடை நம்பியின் கருத்தோவியம், இதோ அவன் கவியோவியம் :

படைப்புப்பல படைத்துப் பலரோடுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழத்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்

பயக்குறை இல்லைந்தாம் வாழும் நாளே.