பக்கம்:உணர்வின் எல்லை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

உணர்வின் எல்லை

‘கூர்மையான வேல் உடைய சோழனே! போர் புரியும் படை தரும் வெஸ்யம் உட்கின்ற கலப்பை நிலத்தின் கண்ணே ஊன்று சாலிடத்து விளைந்த நெல்லினது பயன்........ஏரைப் பாதுகாப்பாருடைய குடியைப் பாதுகாத்து அக்காவலாலே ஏனைக் குடிகளையும் பாதுகாப்பாயாயின், நின் அடியைப்போற் றுவர் நின்பகைவர்’ என்ற அழகிய கருத்துக்களைத் தெரிவிக்கின்றது மேற்கண்ட புறப்பாடல், இக் கருத்துக்களையே. ‘இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்’ என்ற, நெஞ்சை யள்ளும் செஞ்சொல் சிலப்பதிகார அடி கள் எதிரொலி செய்கின்றன.

சமய காலம்

இவ்வாறு சங்க காலத்தில் போற்றப்பெற்ற உழவர் பெருமை, சங்க காலத்தை அடுத்து வந்த சமய காலத்திலும் தனிச்சிறப்பைப் பெறலாயிற்று. சங்க காலத்தில் கருவாய் இருந்த பல கருத்துக்கள் சமய காலத்தில் பேருருக் கொண்டன ; அணுவாய் இருந்த பல சிந்தனைகள் சமய காலத்தில் ‘விசுவரூபம்’ தாங்கின. எண்ணமாய் இருந்த பல உண்மைகள் இயக்கங்களாய்ச் சமய காலத்தில் வீறு கொண்டன. சங்க காலம் இலக்கிய ஆறுகளைக் கண்டது காலமோ இலக்கியக் கடல்களைக் கண்டது. சங்க காலம், கிறித்து சகாப்தத்திற்குச் சில பல நூற்றாண்டுகட்கு முன் தொடங்கி, கி. பி. 3 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது. சமய காலமோ அதற்குப்பின் தொடங்கி, ஏறத்தாழ ஆயிரத்து அறு-