பக்கம்:உணர்வின் எல்லை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17. மோகனப் பள்ளு

தைத்திங்கள் முதல்நாள் தமிழர் திருநாள்; உழவர் பெருநாள். இப்பொன்னாளில் உழவர் வாழ்வை ஒட்டி எழுந்த ஓர் இலக்கியத்தை— தமிழிலக்கியத் கருவூலத்துள் ஒளிந்து ஒளிரும் ஒரு நூலை—நினைவு கூரல் பொருத்தமும், பயனும் உடையதன்றோ ?

தமிழ் இலக்கியத் தொகையுள்ளே பள்ளு நூல்கள் தனிச்சிறப்பு வாய்ந்த ஒருவகைப் பிரபந்தங்கள். ஏர் பிடித்துச் சீர்பெருக்கும் காராளர் வாழ்வைப் பாடும் வன்மை நிறைந்தவை அப் பிரபந்தங்கள். ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகட்கு முன்னே அவை தோன்றின எனலாம்.

பள்ளுப் பிரபந்தங்களுள் தலை சிறந்ததாய்ப் போற்றப்படுவது முக்கூடற் பள்ளு. அந்நூலைத் தமிழறிஞர் திரு. மு. அருணாசலம் அவர்கள் 1949 ஆம் ஆண்டில் அரிய ஆராய்ச்சி முன்னுரையுடன் அழகுறப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்கள். 1940 ஆம் ஆண்டில் தளவாய்புரம் திரு. அருணசலம்பிள்ளை என் அவர்கள் எழுதிய குறிப்புக்களுடன் ‘வையாபுரிப் பள்ளு’ வெளியிடப் பெற்றுள்ளது. 1944 ஆம் ஆண்டு ‘முக்கூடற் பள்ளு’ வெளியிட்ட திரு. மு. அருணாசலம் அவர்கள் எழுதிய செறிவுடைய முன்னுரையையும், சிறந்த குறிப்புரைகளையும் கொண்ட