பக்கம்:உணர்வின் எல்லை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

உணர்வின் எல்லை

எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்

      இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்!’

கலைகளின் களஞ்சியமாகத் திகழ்ந்த பண்டைய பாரத நாட்டில்—நந்தமிழ் நாட்டில்—தோன்றிய கலைமகள் இன்று ஈங்கில்லை. மேலை நாடுகளில், காலையிரவயெனக் கல்விச்சுடர் கொளுத்தி வாழ்கிறாகள். ‘புத்தம் புதிய கலைகள் மெத்த வளருது மேற்கே’ என்ற புதுமையுரையும் எழுந்து விட்டது. நம் நாட்டிலோ, அறியாமைப் பேய் தலைவிரித்துத் தாண்டவமாடுகிறது. சோம்பற்பேய் கம்பீரமாக நாட்டை அரசாளுகிறது! இக்கோரக் காட்சிகளை யெல்லாம் கண்டும் பாரதியார் எவ்வாறு வாளா விருப்பார்?

‘ஞான மென்தோர் சொல்லின் பொருளாம்
      நல்ல பாரத நாட்டிடை வந்தீர்!
ஊன மின்று பெரிதிழைக் கின்றீர் ;
      ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்;
மான மற்று விலங்குக ளொப்ப

      மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?’

என்று நம்மை வினாவுகிறார்.

என்ன விடை கூறுவது? என்றைக்குக் கூறுவது?

பாரதியார், ‘மாயையில் அறிவிழந்த’ நம்மை மேலும் மேலும் இடித்துரைத்துப் புண்படுத்த விரும்பவில்லை.