பக்கம்:உணர்வின் எல்லை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

உணர்வின் எல்லை

சென்ற அச்செய்தி காட்டிலே சட்டமாகும் நாள்தரன், ‘பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக’ என்று, ஆதிரை வாயிலாக, அறிவாளர் உலகம் வாழ்த்திய வாழ்த்துப் பலிக்கும் நன்னாளாகும். அந்நாளிலேதான், தனிமனிதன் உரிமை வாழ்விற்குத் தீங்கிழைத்த ஆட்சியைத் தீக்கிரையாக்கிய புரட்சி வரலாறாகச் சிலப்பதிகாரம் விளங்குவது போல, “அத் தனிமனிதன் உயிர் வாழ்விற்கே ஆருயிர் மருந்தாய் விளங்குவது உணவு; அவ்வுணவை உலகிற்கெல்லாம் உரிமையாக்குவதே தலையாய கடமை என்று அறத்தொண்டாற்றிச் சிறை சென்ற அன்னையின் வீர வரலாறே மணிமேகலை,” என்று போற்றப்படும்.