பக்கம்:உணர்வின் எல்லை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. 'பாடுக பாட்டே


நல்ல வெயில்! கால் ஊன்ற முடியவில்லை !கால் கொப்புளித்துவிடும்போல இருக்கிறது. ஆ னால், யாரோ ஒரு மு தி ய வ ள் எங்கோ வெகு தாத்தி லிருந்து நடந்து வருகின்றாள். அவள் கழுத்தில் வெள்ளிய சங்குமணி காணப்படுகின்றது. அவள் கூந்தலும் அந்தச் சங்குமணி போலவே நரைத் திருக்கிறது. அவள் முகத்தில் கால வேகத்தின் சின்னங்களாகக் கோடுகள் பல-சுருக்கங்கள் பல தென்படுகின்றன. ஒரு காலத்தில் பிறைதுதலா யிருந்த அவள் நெற்றி, இப்பொழுது கன்னங்கறே லென்று கருத்துச் சுருங்கிவிட்டது. தள்ளாடித் தள்ளாடி நடந்து வரும், குறி சொல்லும் வாழ்க்கை யையுடைய அந்தக் கிழவியின் ஒளி குன்றிய கண் கள் யாரையோ தேடுகின்றன.

'வயிற்றுத் துன்பம்-பசி-இதைப் போக்க என்ன பாடு படவேண்டியிருக்கிறது! யாரேனும் குறி சொல்ல வாவது அழைக்கமாட்டார்களா ? 'என்று ஆவலோடு நடந்துகொண்டிருந்த அந்தக் கிழவியை, 'ம ன த் துன்பம்- கவலை - இதைத் தொலைக்க என்ன பாடு-யாரேனும் குறி சொல்ல வாவது வரமாட்டார்களா !' என்ற ஏக்கத்தோடு இருந்த இளம்பெண் ஒருத்தி வெளியே வந்து பர. பரப்புடன் கூப்பிடுகின்றாள்.