பக்கம்:உணர்வின் எல்லை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

திருச்சிராப்பள்ளி அர்ச். சூசையப்பர் கல்லூரியில் 1942-ஆம் ஆண்டில் பழைய இ ைட க் க லே வகுப்பில் முதலாண்டில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆண்டில்தான் இந்திய விடுதலைப்போர் தனது உச்ச நிலையை பெய்தியது. 1943-ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் 9-ஆம் நாள்தான் அண்ணல் காக்தி அடிகள் தலைமையில் இக்திய விடுதலே வீரர்கள் ஒன்று கூடி ‘வெள்ளேயனே வெளியேறு’ என்ற விழுமிய முடிவை கிறைவேற்றினர். அதன் விகளவாக மூண்டெழுந்த விடுதலைப் போரில் இந்திய மாணவர் உலகு இரண்டறக் கலந்தது; கொடி உயர்த்திப் போர்ப்பறை கொட்டிக்களம் புகுந்தது. அப்போது என் நெஞ்சம் பாடிய இலக்கியப் பண்ணே, ‘பாரதியும்-பாரதியும்’ என்ற கட்டுரை.

விடுதலை இயக்கம் வீறு கொண்டிருந்த நிலையில் ஆசிரியர்களும் பெற்றாேச்களும் அறியா வகையில் வகுப்பறைகளே விட்டு வெளியேறி மாணவர் ஊர்வலங்களிலும் கிளர்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் பேறு பெற்ற எனக்கு மகாகவி பாரதியாச் பாடல்கள் மந்திர மொழிகளாய் விளங்கின. எனது அருமைத் தந்தையார் இட்ட பிச்சையாய் என்பால் குழந்தைப் பருவம் தொட்டே குடி கொண்டிருந்த இலக்கிய உணர்விற்குப் பெரு விருந்தாய் விளங்கிய பாரதியார் பாடல்களில் தோய்ந்திருந்த எனது உள்ளத்து உணர்வுகட்கு ஒர் உருவம் சமைக்க 1943-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் வெளிவந்த அர்ச். சூசையப்பர் கல்லூரிக் கலைமலர் (Magazine) சிறந்த வாய்ப்பு அளித்தது. அதன் பயனுக அம்மலரில் வெளியிடப் பெற்ற ‘பாரதியும்-பாரதியும்’ என்ற கட்டுரையே யான்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்வின்_எல்லை.pdf/4&oldid=1373229" இலிருந்து மீள்விக்கப்பட்டது