பக்கம்:உணர்வின் எல்லை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. வல்லவள்

‘கட்டுரை வேண்டும்’ என்ற தமிழன் குரலின் கட்டளை கிடைத்தது. ‘எதை எழுதலாம்?’ என்ற எண்ணத்தில் ஆழ்ந்தேன். எதிரே ‘குறுந்தொகை’ப் புத்தகம் இருத்தல் கண்டேன். எடுத்துப் பிரித்தேன்; ஒரு பாட்டு என் எதிரே நின்றது. எட்டே அடிகள்; பாட்டைப் படித்தேன்; மீண்டும் மீண்டும் படித்தேன், எழுத்துக்கள் மறைந்தன; எண்ண உலகில் பறந்தேன். பாட்டுலகம் என்னை அடிமை கொண்டது. அந்தப் பாட்டு—அதில்— பொங்கிவரும் உணர்வு வெள்ளத்திலே தெப்பம் போல மிதந்தேன். எங்கள் காவிரி வெள்ளத்தில் இனிய அலைகள் போல அந்தக் கவிதை வெள்ளத்தில் உந்தி உந்தி வரும் உணர்வு அலைகளை எல்லாம் உணர்ந்து உணர்ந்து மகிழலானேன். அந்த மகிழ்ச்சியே எழுத்து வடிவம் பெற்றது.

எங்கும் ஒரே இருள்; மையிருள். இன்னும் பால் நிலவு வான வீதியில் உலாவரப் புறப்படவில்லை; கார்த்திகைத் திருநாளில் ஊரெல்லாம் விளங்கும் சுடர் விளக்குகள் போல அகல்வானம் முழுதும் விண்மீன்களின் கூட்டம் நிறைந்து கிடக்கிறது. ஊரெல்லாம் உறங்குகிறது. தனிமையில் விழித்திருப்போரை அஞ்சச் செய்யும் பேரமைதி யாண்டும் நிலவுகிறது. ஊரின் மூலைகளில் சில நாய்கள் மட்டும்