பக்கம்:உணர்வின் எல்லை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

உணர்வின் எல்லை

கண்டான். வீடு நோக்கிச் செல்ல விரையும் தன் ஆருயிரை ஆரத் தழுவி மகிழ்ந்து, ‘அமிழ்தே, போய் வருக! மறவற்க!’ என்று தேனிதழ்களாற் கூறி அனுப்பினான். அன்னமென அவள் செல்லும் அருவழியினைத் திரும்பித் திரும்பி நோக்கியவனாய், ‘இன்னும் ஒரு பகல் எவ்வாறு கழியுமோ?முள்ளூர்க்கானத்தின் நறுமணம் ஒத்த அவள் கூந்தல் மணத்தில், ‘இமைப்பொழுதும் நீங்காது’ மூழ்கி திருக்கும். நாளும் வாராதோ!’ என்று எண்ணிக் கலங்கியவனாய்க் கல்லும் முள்ளும் கால் தைக்க, கான்பாறு கடந்து, தன் ஊர் சேர்ந்தான் தலைவன். வீடு வேம்பாய் — வெண்ணிலவு பெரும்பகையாய் விளங்கியது அவனுக்கு. எனினும், அவன் ஆண் மகன் அல்லனோ? உணர்விலும் அறிவிற்சிறந்தவன் அல்லனோ? அவன் அறிவு வேலை செய்தது; திட்டம் உருவாகியது.

கீழ்வானம் சிவந்தது ; கிளர் ஒளியும் தோன்றல் ஆயிற்று. வைகறைப் போது வந்தது கண்டான். வானத்து இளஞாயிறுபோல வையகத்தே விளங்கிய அவன், இரவு நடந்து வந்த இடரான வழியெல்லாம் ஏறுபோலக் கடந்து சென்றான். காலைக் கதிரவனது ஒளிபெற்ற உலகம் புதுமைக் கோலத்துடன் விளங்கிய காட்சி அவன் விழிகட்குப் பேரின்பம் வழங்கியது. அவன் தன் தலைவியின் இல்லம் நோக்கி விரைந்தான். தலைவியின் தாயும் தந்தையும் பிறரும் அவனை முகமலர்ந்து வரவேற்றனர்; விருந்துண்டு செல்லவும் வேண்டினர். அவன், தன் ‘எண்ணம்