பக்கம்:உணர்வின் எல்லை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்ன வீரம்!

49

அல்லாவிட்டால், உன்னை விடமாட்டேன்,’ என்று என் கையை இறுகப் பிடித்துக்கொண்டான், அறைக்குள் போய் எதையோ திருடித் தின்று விட்டுவரும் செல்வக் குழந்தையின் மலர்க் கரங்களைப்பற்றி, அன்பு மொழிகளால் அதட்டும் தாய்போல.

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘ஐயோ! நான் சங்க இலக்கியப் பாட்டல்லவா படித்துக் கொண்டிருந்தேன்!’ என்றேன். ‘அது சரியப்பா, பாட்டைப் படிக்கும் போது....... அதுவும் சங்க இலக்கியப் பாட்டைப் படிக்கும்போது சிரிப்பு எதற்காக?’ என்றான் சொக்கலிங்கம், என்னைக் குற்றவாளியைப் பார்ப்பவன் போல் சந்தேகக் கண்களால் பார்த்துக்கொண்டே.

அப்போதுதான் என் நினைவுக்கு வந்தன, நான் படித்துக் கொண்டிருந்த பாட்டும், நான் ஏன் சிரித்தேன் என்பதும்.

***

பாரியனைய தமிழ் புரக்கும் வள்ளல்களின் கருணையே போல, இமிழ் கடல் சூழ்ந்த வையகம் முழுவதும் இன்பக் கடலில் மூழ்கி எல்லையில்லாக் களிப்பெய்த, வான வெளியில் வெண்டிங்கள் தண்ணிலவு பரப்பிவரும், அழகே வடிவெடுத்த அற்புதக் காட்சியை, வைத்த கண் வாங்காது கண்டு உவகை கொள்கிறோம். ஆயினும், மூளை முழுதும் முற்றுணர்வாக, அத்திருக்காட்சியைக் காணும் நிலையினின்றும்

4