பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 லா. ச. ராமாமிருதம் புதுச்சொற்கள்? இத்தனை வருட சாதகத்தில் தற்செய லாக ஒன்றிரண்டு நேர்ந்திருக்கலாமோ என்னவோ? சொற். களையே சிருஷ்டிக்குமளவுக்குப் பெரிய படைப்படாளியாக என்னை நான் கருதவில்லை. பிரயோகங்களில் அபூர்வமான பொருள் ஏற்றம் அல்லது ஒரு தனிச்சொல் தான் பதிந் திருக்கும் விதத்தில் ஒரு இடப்புதுமை-இவை நிகழ்ந்திருக் கின்றன. லாதகம், ஸ்ாதகம், அலுப்புக் காணாத ஸ்ாதகம்? சித்திரமும் கைப்பழக்கம்-ஏற்கனவே சொல்லிவிட்டேனோ, இருக்கிற சொற்களை அவைகளின் இடமும் சமயமும் தேடித் தேர்ந்து, அங்கு அவைகளைப் பதித்தாலே போதும். ஆதிற்கே உண்மையான செளந்தர்ய உபாசனைக்கு ஆபுசு பற்றாது. இந்த சமயத்தில் ஒன்று சொல்லுதல் அவசியம். இந்த சூரிய சாகரியில் புதிது, அதாவது ஏற்கனவே இல்லாதது, இப்போது நான் உண்டாக்கினேன் என்று எதுவுமில்லை. அவன் படைத்து, அவனுடைய ரஸ்மி படாத்தை நாம் எதையும் உத்தாரனம் செய்துவிடவில்லை. அவனுடையது Creation. மனிதனுடையது உண்டாக்கல் saff (Gustig hljässir. invention/discovery $$25 fervention களின் அடிப்படைத் தத்துவங்களும் இயற்கைக்குச் சொந்த மானவையே. உலகம், உயிர் பிறந்ததற்கு முதற் காரணமாம் அனு:த்திரள் ஒலியிலிருந்தது. ஆக்கசக்தியின் ஓயாத இயக்கம் எங்கு கொண்டு போய் விடப்போகிறதோ அதுவரை அவனுடையதே. ஆகவே சொற்களும் இந்த ரகத்தைச் சேர்ந்தவையே. ஆகையால் இதில் என் படைப்பு என்ன தனி; இடமறிந்து சமயமறிந்து அதிர்ஷ்டமும் சேர்ந்து சொற்களின் சேர்க்கையில் நேரும் உள்ளுணர்வின் கூச்சம், தரம்புகளில் ஒரு விழிப்பு, இரத்த அணுக்களில் ஒரு மலர்ச்சி, அதன்மூலம் ஒரு திரை விழுதல், அதனால் வெளிப்படும் சக்தி தரிசனம்-அடேயப்பா-i am Prometheus என்பதை அவ்வப் பொழுது உணர்ந்துகொண்டேயிருக்கிற பிரக்ஞை விரிவுக்கு ஈடு எது?