பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 g6 லா, ச. ராமாமிருதம் இலாது எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் முழு, மனதோடு அவருடைய ஈடுபாடும், அந்த ஒழுங்கான பாத்தி களும் பூச்செடிகளும், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தண்ணிர் பாய வெட்டியிருக்கும், கால்வாய்களும் , தென்னை களின் அடியைச் சுற்றி ஒழுங்கான அந்த வட்டக் குழிவுகளும் செல்லப்பாவின் கை மட்டுமன்று, ஆதிக்கம் பளிச்சிட்டது. அரைகுறைக் காரியம் அவரிடம் கிடையாது. மூன்றாம் நாள் காலை நான் கிளம்பத் தயாரானதும் சொன்னார். 'என்ன அவசரம் போய் வெட்டி முறிக்கப் போகிறீர்கள்? இன்று மாலை சிட்டி வருவதாக எழுதியிருக் கிறார். கலகலப்பாய்ப் பேச நமக்கு விஷயங்கள் நிறைய இருக்கும் இருந்துவிட்டுப் போங்களேன்!” இரண்டு மூணு தரம் சோல்லிவிட்டார். அவர் சொன்னதும் உண்மைதான். ஆனால் ஏதோ சாக்குச் சொல்விக்கொண்டு நழுவிவிட்டேன். எனக்கே காரணம் இன்னும் தெரியவில்லை. புத்திக் கிறுக்கு, செல்லப்பாவும் நானும் முதன் முதலாகச் சந்தித்த தெப்டோ? சரியாக ஞாபகமில்லை. எனக்கு 18, 13 வயதில் என் முதல் தமிழ்க் கதையுடன் ஹனுமான் வாரப் பத்திரிகை (ஆசிரியர்-சங்கு சுப்ரமணியம்} ஆபீசுக்குப் போனேனே, அங்கே அவர் உதவி ஆசிரியராக இருந்தாரே அப்பவா? அப்போது நாங்கள் பேசினதாக நினை வில்லை. எனக்கு அங்கு தி.ஜ ர.வைத்தான் தெரியும். அல்லது மரீனா கடற்கரையில் மணிக்கொடி எழுத் தாளர்கள் மாலை மாலை சந்தித்துப் பேசுவார்களே, அப்போதா? ஒன்று தெரியும் செல்லப்பாவுக்கு என் ஆரம்ப கால எழுத்துக்களைப் பற்றி நல்ல அபிப்பிராயமில்லை. 'இந்தப் பையன் நன்றாக எழுதுகிறான்' என்று தி. ஜ. ர என்னை