பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j 0.8 லா. ச. ராமாமிருதம் 'அபூர்வராகம் சந்திரோதயத்தில் வெளிவந்தது பெரி தல்ல. வந்த சுருக்கில், திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோடில் செல்லப்பாவைச் சந்திக்க நேர்ந்தது. அதே சாலையில் பத்து நிமிடங்களுக்கு முன்தான் ந. சிதம்பர சுப்ரமண்யத்துடன் பேசினேன். செல்லப்டா, கதையைப் பாராட்டினார். அவர் பாராட்டிய வாசகம் ஞாபகமில்லை. ஆனால் முடிவில் வார்த்தைகள் இன்னமும் நினைவில் ஒலித்துக்கொண்டிருக் கின்றன. 'என்ன ராமாமிருதம், வாழையிலை ஏட்டில் அல்வாத் துண்டைப் பரிமாறிவிட்டு அதில் முடி அகப்பட்டாற்போல் கதை முடிவில் உங்கள் வழக்கமான சேஷ்டையைக் காண் பித்துவிட்டீர்களே!' "அபூர்வராகம்’ எனக்கு எழுத்துத் துறையில் ஒரு திருப்பம். வாசகர்களும் சக எழுத்தாளர்களும் 'இதென்ன புதுக் குரல் கேட்கிறது?’ என்று கண்ணைக் கசக்கிக்கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தார்கள். அதற்குப் பின்னாலும் என் கதைகள் வெளிவந்து கொண் டிருந்தன. செல்லப்பா என்ன அபிப்பிராயம் சோல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஜனனி, யோகம், புற்று ப்ரளயம்...ஊஹாம் செல்லப்பா வாய் திறக்கவில்லை. நானும் கேட்கவில்லை. எனக்கு மட்டும் ரோசம் இல்லையா? அவர் வரையில் என்னிடம் ஏதோ ஒரு அத்திபூத்து, உதிர்ந்துவிட்டது என்று என்னைப்பற்றி நினைத்துக்கொண்டேன். என்னில் ஏதோ விசனம் கண்டேன். காலம் கடந்தது. ஒருநாள் மாலை பெரிய தெருவில் (நாங்கள் திருவல்லிக் கேணி வாசிகள்) ஏதோ குருட்டு யோசனையில் எதிரே யார், என்ன வருகிறது என்றுகூடத் தெரியாமல்