பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 லா. ச. ராமாமிருதம் கடைசியாக அவர், தியாகராய நகர், மோதிலால் தெரு வில் குடியிருந்தபோது, அவர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகத் தெரிந்து, காணப் போயிருந்தேன். அங்குதான் தெரிந்தது, நோயே என்னென்று, சரியாகப் பேச வரவில்லை. நாக்குக்குப் பதிலாகக் கண் பேசிற்று. திரியாகத் திகுதிகுத்தது. நடமாட்டம் இருக்கிறது. பேச்சுத்தான் பாதிக்கப்பட்டிருக் கிறது என்று மாமியிடமிருந்து தெரிந்துகொண்டேன் அப்படியும் ஏறக்குறைய ஒரு தலை சம்பாஷணையில் ஒரு மணி நேரம் இருந்துவிட்டு, வீடு திரும்பினேன். போய் வந்த ஒரு மாதத்துள், ஒரு காலை ஹிந்துவை, தடுப்பக்கத்தில் பிரித்ததும் கண்ணில் பட்டது அவர் மரண மான செய்திதான் (Obituary) அவர் வீட்டிலிருந்தும் தபால் வந்தது. ஆனால் நான் உபசாரத்துக்குப் போகவில்லை, காரணம்? என்னென்று சொல்வேன்? ஏதோ ஒரு கூச்சம், துக்கப்படுவோரின் கண்ணிரைச் சந்திக்க அச்சம் , உண்ம்ை பின் தரிசன பயம் கூடவே, கூடுவிட்டு ஆவிதான் டோன பின்னர் அங்கே என்ன இருக்கிறது என்ற தத்துவம், ஆனால் இது என் கோழத்தனத்தை நியாயப்படுத்த நொண்டிச்சாக்கு என்று எனக்கே உடனே தெரிந்துவிட்டது. ஈமிச்சடங்குகள் முடிந்து பத்து நாட்கள் ஆகியிருக்க லாம். நண்பர் மகரத்திடமிருந்து கடிதம் வந்தது. "சிதம்பர லாசப்ரஹ்மண்யனின் மனைவியார், "எல்லாரும் வந்தார்கள், ஏன் ராமாமிருதம் வரவில்லை! கடிதம்கூடப் போட்டுதே' என்று மிகவும் வருத்தப்பட்டார் கள். அங்கு நான் இருந்த நேரத்துக்குள், இரண்டு மூன்று தடவை கேட்டுவிட்டார்கள். நீங்கள் உடனே போய் அவரைப் பார்க்க வேண்டும்.