பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

烹釜2 லா, ச, ராமாமிருதம் முனை திரும்பியதுமே கால்கள் தாமே வேகமெடுத்து விட்டன. ஆனால் முருகன் ஸ்பீடு என்னால் முடியாது. அதென்ன சுருள் பிரிஞ்ச மின்னல் மாதிரி ஒரே சீறல். "பரவாயில்லே, பட்டனத்துப் பையன் பாப்பாரப் புள்ளேக்கு நல்லாத்தான் ஒடறே!' வாய்க்கால் தாண்டினதும் எந்த அடைப்புமில்லாமல் ஒரே வெட்டவெளி. அது எங்களை விழுங்கி, நானே எனக் கில்லாமல், இத்தோடு இழைஞ்சு போயிட்டமாதிரி-ஒரு விதத்தில் இது பயமாயிருக்கு. நல்லாவுமிருக்கு. தரையின் மேடு தாழ்வு, வளைவு தெளிவுகள் கிரஹண சமுத்ரம் மாதிரி (குளிச்சிருக்கேனே!) அலைபாயறது. எட்டட் ரொ ம் ம் ம் ட எட்டட் பச்சை விளிம்பு. அந்த விளிம்புக்குக் கரை கட்டி ஒரு மேடு வளைஞ்சு வளைஞ்க போக, அதன்மேலே பனைமரங்கள் சோல்ஜர் பாரேட் மாதிரி காவல் நிக்றதுகள். வெய்யில் நக நக எங்கள் ஒட்டம், எங்கள் வேகம், எங்கள் மூச்சு ஏதோ ஒரு ஒழுங்கில் விழுந்துபோச்சு இறைப்பு இல்லை. ஒரே ஸ்டேடி ராமு, அதோ பாத்தியா பச்சையம்மன் கோயில்" ஆமா, என் பார்வையின் மிதிப்பாட்டத்தில் அதோ ரெண்டு பெரிய சிலைகள் பூமியின் அலைகளிலிருந்து எழறது. நெருங்க அதுகள் ஒரு மதில்மேல் உட்கார்ந்திருக்கு அது களுக்கெதிரில் ஒரு கோயில் அந்த ஸ்ைஸுக்கு ஒப்பிட் உால், கோவில் நிறுத்திவெச்ச நெருப்புப் பெட்டி நெருங்க நெருங்க, ஒன்று ஆண் மற்றது. பெண் ஆளுக்கு நெட்டுக்குத்தலா கையில் ஒரு கத்தியை ஏந்திண்டு ஒரு காலைத் தொங்கவிட்டு, ஒரு காலை மடிச்சிண்டு உட்கார்ந் திருக்கு,