பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 லா. ச. ராமாமிருதம் ஆழ்ந்த சிந்தனையிலோ, நீண்ட பெருமூச்சிலோ, நெஞ்சின் தழுதழுப்பிலோ நீ படித்துக்கொண்டிருக்கையில் வரிகளின் நடுவே, தொக்கி உன்னைத் தடுத்து நிறுத்தும் மெளனத்திலோ, கன்னத்தில் துளித்த கண் முத்திலோ கனம் தழைந்த புன்னகையிலோ அவன்தான் ஆப்படித் தோன்றித் தெரிந்து உடனே மற்ைகிறாள். ஆயுசைத் தூக்கி உடைப்பில் போடு. தருணங்களுக்கு வாழ், யந்திரம் போன்ற வயதைக் காட்டிலும் தருணங்களின் சட்டையுரிப்பு. விட்டில் பூச்சியாக ஒரு சமயம். தருணத்தின் எரிப்பில் அத்துடன் ஐக்கியமாவது எப்படி? அவள் கண் உன்மேல் விழக் காத்திருப்பதேதான் பிறவி யின் கனவே. கேற்று இரவு யாரோ தட்டி எழுப்பினாற்போல். வெடுக்கென விழித்துக்கொண்டேன். யாரது? யாருமில்லை. ஜன்னலுக்கு வெளியே வெள்ளி முளைத்திருந்தது. ஆனால் விடிவு என்னுள் அதுதான் எழுப்பியிருக்கிறது. it is the spirit alone matters ஸ்பிரிட் என்கையில் ஆவி அன்று என்னிலும் உயர்ந்த தடமே நோக்காய், குறியாய், அதை நோக்கி என்னை உந்தும் உள்சக்தி, ஊக்கம், The instinct for noble aspirations.