பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. ஜனனியிலிருந்து சிந்தா நதி வரை தாய்மார்களே, பெரியோர்களே, தமிஸ்காரம். சகோதர சகோதரிகளே ஆசிர்வாதம். நெடுநாட்களுக்குப் பின், இந்தப் பக்கங்களில் உங்களைச் சந்திக்கிறேன். நான் பிறந்தகம் வந்திருக்கிறேன். எழுத்தாளனுக்கு இருந்தாலும் இருக்கலாம், எழுச் துக்குப் பிறந்தகம் கிடையாது. அது ஒரு எடுப்பார் கைப் பிள்ளை. ப்ளாட்பாரத்திலிருந்து ஜந்தடுக்கு மாடிவரை, அங்கிருந்து பாணசாலை வரை-அது திரியும் ரோந்து அப்படி விருதைப் பெற தான் டில்லிக்குச் சென்றிருந்தபோது, டில்லி வானொலியில் என்னைப் பேட்டி கண்டார்கள். பேட்டி கண்டவர், பேட்டி வாக்கில், "ஜனனியிலிருந்து சிந்தா ததி வரை" என்ற சொற்றொடரை உபயோகித்தபோது, என்னில் நேர்ந்த கிளர்ச்சியை அவர் அறியமாட்டார். ஏனெனில் 1948இல் கலைமகளில் ஜனனி வெளிவந்தபோது. அதன்மூலம்தான், நான் என் எழுத்துக்களில் சாதாரண மாகக் கையாளும் விஷயம், நான் கதை சொல்லும் போக்கு, என் உரைநடை இத்யாதி அம்சங்கள் வாசகர் கவனத்தைப் பற்றி இழுத்தன.