பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 74 லா. ச. ராமாமிருதம் எட்டத்தில் ஏதோ தரிசன சாத்யத்தின் சாயை காட்டிக்கொண்டு சமயங்களில் மந்த்ரோச்சடணங்கள் போன்ற சப்த தியங்களுடன் லாஹலம் புரிந்துகொண்டு வாசகனுள் உறங்கிக்கிடக்கும் சுயப்ரக்ஞையை (அதாவது உயிரின் ஒருமையை, தேடலில் ஆத்மாவின் தனிமையை)த் தட்டி எழுப்பி, கட்டங்களில் சொல்வேகம் கவிதாநயத்தையும் உபநிஷத்தைத் தன்மையையும் அடைந்து -இத்தனையும் சேர்ந்துதான் சித்தா நதி. நிகழ்ச்சி நினைவில் ஊறி ஊறிச் சரித்திரமாகி, சரித்திரம் நினைவாகி, நினைவு கதையாகி, கதையைச் சொல்வில் சொல்லி, சொல், பிசிர்விட்டு, சொல்லின் உருவேற்றத்தில் விஷயம் மெருகேறி, ரத்தத்திலேயே தோய்ந்து தம் மனத் தையும் மாண்பையும் ஊட்டி வளர்க்கும் கவிதையா இ விடுகிறது. நிகழ்ச்சியின் கிளர்ச்சி அடங்கி ஒய்ந்து பின்னோக் இல், வாழ்க்கையைக் காவியமாய்ப் பார்க்கக் கொடுத்து வைக்கும் போது, அமைதியின் சிறகுகள் ஆசியின் மெத்தில், மேல் இறங்கும்போது, காத்திருக்கச் சொன்னதின் காரணத்தை அனுபவமாகச் சில சமயங்களில் உணர்கிறோம். என் வாழ்க்கையின் அந்திம வேளையில், என் தrத்ரத், தின் வெளிச்சத்தில் சிந்தா நதிக் கரையோரம், தன்னத் தனிமையில் உட்கார்ந்து எண்ணங்களை அசைபோடுகிறேன்.