பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 & லா. ச ராமாமிருதம் வெட வெட குளிருக்குத் தலைமேல் இழுத்துப் போர்த் திய கம்பளியுள், கிருஷ்ணன் பேரைச் சொல்வி எங்களை எழுப்பும் பாட்டு எட்டும். அம்மாவின் நடமாட்ட சத்தங்கள் கேட்கும். அம்மா குரல் வேய்ங்குழல் போன்றது. சற்று உச்ச ஸ்தாயியில் சற்றுத் திகட்டும் இனிப்புடன்... கம்பளியுள் முதல் விழிப்பில் கேட்கும் இந்த முதல் ஒசை தான், அன்றைய, அன்றன்றைய நடப்புக்குக் கணித்த ஸ்ருதி என்று இப்போது நினைத்துக்கொள்ள எனக்கு மிகவும் பிடிக்கிறது, ○ ஆம், நினைத்துப் பார்ப்பதென்பதே ஸ்ருதி மீட்டல் தானே, சிந்தனையின் இசைவில், சிந்திக்கும் விஷயங்கள். அவைகளின் சூட்டின் அவசரமும் ஆத்திரமும் பின்னோக்கில் தணிந்து, தன் தன் இடத்தில் விழுந்து அமைதி பெற்று விடுகின்றன. இதில் அம்மா, அவளைப் பற்றி நான் எண்னும் போதெல்லாம்-அவளை எண்ணாத நாட்களே இல்லைஅவளுடைய ஸ்வரஸ்தானத்தில், அவளுடைய எண்ணத்தில், பேச்சில், செயலில், சந்தோஷங்களில், துயரங்களில் தீர்மான மாக, சுத்தமாக, உள்ளத்தின் வானில் ப்ரகாசிக்கிறாள். Ç நான் தவங்கிடந்து பெற்றபிள்ளை. திலோமம் பண்ணி, விரதங்கள் முழித்து ராமேசுவரம் போய்... இத்தனை அருமையாக நான் பிறந்தபோதிலும், அம்மாவிடம் தனிக் கொஞ்சல்கள் சலுகைகள் நான் ogou வித்ததாக அந்தச் சின்ன வயது முதற்கொண்டே ஞாபகம் இல்லை.