பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 & லா, ச. ராமாமிருதம் எத நியாயம் என்று தெரிவதற்கே குருக்ஷேத்திர யுத்தம் நிகழ்ந்த பூமி இது. அந்த யுத்த களத்திலேயேதான் கீதை பிறந்தது. என்னுடைய இந்த வயசில் ஊசிக்காதின் வழி மறு வாசற்படி தாண்டக் காத்திருக்கும் இந்தக் கட்டத்தில்கடைசி மூச்சின் இழைக்கு ஊசிக்காதுகூட சொர்க்கவாசல் தான்-இந்தக் கட்டத்தில் இலக்கியத்தைப் பற்றி, தான் மேல் சொன்னவாறுதான் சிந்திக்கத் தோன்றுகிறது. இன்னும் பத்துவருடங்களுக்கு முன்னால் இந்தக்கட்டுரையை நான் எழுதும்படி நேர்ந்திருப்பின் அதன் முகமே வேறு மாதிரியாக இருந்திருக்குமோ என்னவோ? ஆனால் அதற்கும் பதில் இருக்கிறது. Creative přecess - Gjih šuman sa: என்னுடைய அந்தக் கட்டம் அப்படி நேர்ந்திருக்கும். இது சமயத்தில் ஒன்று சொல்வது சொல்லிவிடுதல் பொருத்தம் என் குடும்பத்தின் பின்னணிப்படி, வாழ்க்கை வில் என் பங்குக்கு எனக்கு நேர்ந்த நல்லது, பொல்லாது, சோதனைகளின்படி, அவைகளும்: அவைகள் மூலம் என்னு டைய இலக்கிய அனுபவங்கள் என்னை உருவாக்கியபடி நான் ஒரு ஐதீகவாதி. என் எழுத்தும் என்னைப் போலத்தான் ஐதிகம் என்றால் என்ன? உடனே பஞ்சக்கச்சமும் குடுமியும் தான் மனதில் தோன்ற வேண்டுமா? அப்படி இருந்தாலும் தான் என்ன? எழுத்துமட்டில் யான் அறிந்த ஐதீகம் வழிவழி பாக வந்து அந்த அந்த காலத்தின் தீயிலோ கங்கையிலோ குளித்து உரமேறி பிறர்க்கும் தனக்கும் தன்னை நிருபித்துக் கொண்டிருக்கும் சொல். . இது தான் படித்து உங்களுக்கு வழங்கும் சொல் அல்ல. என்னுடைய Creative processஇல் நான் கண்ட சொல். ஆனால் இன்னும் அறிந்த சொல் அல்ல. மேலே: