பக்கம்:உதட்டில் உதடு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நொய்புடைத்துக் கொண்டிருக்கும்
வேலையை நிறுத்தித்தன்
கையெடுத்தாள், தன்சுருக்குப்
பையெடுத்தாள் ; அதை எடுத்துக்
காசையெடுத்தான், கொடுத்தாள்.
வாரிக்கொண் டையைமுடித்தாள்
வாசமலர் அணிந்த
மங்கைதன் தாயிடத்தி ல் ;
“அப்ேபிலே வைப்பதற்கு
ஒன்றுமே இல்லையம்மா!”
ஒடித்துவைத மிலாறு
ஒரு கட்டு இருந்ததெங்கே ?"
“மான்கொம்பு போலிருந்த
அந்தமிலா றெல்லாம்
மீன்குழம்பு வைத்து
முடிப்பதற்கே போதவில்லை!”
“அப்படியா! ஆகட்டும்,.
குப்பனிடம் நான்சென்று
இப்போதே விறகுக்கு
ஏற்பாடு செய்கிறேன்”
என்றுசொல்லி, ‘வெய்யில்
அதிகரித்த’ தென் றுசொல்லி
தன் கூடையைத் தூக்கித்
தலைமேலே வைத்திட்டாள்.
”வரும்போது பனங்கிழங்கு
வாங்கிவ ம்மா!” என்றள்.
“சரி” என்றள். “வீட்டில்
பத்திரம்” என்றள். சென்றள்.

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/12&oldid=1067167" இலிருந்து மீள்விக்கப்பட்டது