பக்கம்:உத்தரகாண்டம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10

“ஏம்மா! யாரு இறந்து போயிட்டாங்க?... துக்கக் கடிதாசி போல இருக்கு?”

ரங்கன் பின்புறத்தில் இருந்து ஏணியைத் துக்கிக் கொண்டு வருகிறான்.

“ஊருல, அன்னைக்கு மகளைக் கூட்டிட்டு வந்தாளே. அதொரு ரெண்டு மாசம் இருக்கும். அவபுருசன் செத்திட்டான்.

“அந்தக் காலத்துல, எப்படி இருந்தாங்க? காசீல போயிப் படிச்சான். துப்பாக்கிக் குண்டு போட்டு பணக்கார மிராசுகளை ஒழிக்கணும்னு ஒரு மிராசைச் சுட்டுட்டு, மூட்டையோடு நெல்லையும் அரிசியையும் குடிபடைகளுக்குக் குடுப்பேன்னு புதுமுறை கொண்டாந்தான். போலீசு புடிச்சிட்டுப் போயி மரண தண்டனை, ஆயுள் தண்டனைன்னு குறைச்சி, அதையும் மனநிலை சரியில்லன்னு பைத்தியக்கார ஆசுபத்திரிக்குப் பெத்தவங்க சொல்லி மாத்தினாங்க. அவன் அப்படிவே தியாகின்னு செத்திருக்கலாம். அம்பது வருசம், அஞ்சு புள்ளங்களையும் குடுத்து, அவளையும் வதைச்சிட்டு ஒழிஞ்சான். இன்னும் சோறு வடிக்கல... தலையை முழுகறேன். ஒட்டு ஒறவு இல்ல. அவ பாவம் தொலஞ்சிதே!”

கிணற்றடியில் சென்று தண்ணீரைச் சேந்தி அப்படியே தலையோடு ஊற்றிக் கொள்கிறாள். வெயில் நேரத்துக்கு ஊற்ற ஊற்ற இதமாக இருக்கிறது. சேலையைப் பிழிந்து கொண்டு உள்ளே மாற்றுச் சேலை எடுக்க வருகிறாள். கூடை நிறைய நாரத்தங்காய், மணத்தை வீசி என்னைப் பார், பார் என்று அழைக்கிறது.

இதற்கு யார் வித்துப் போட்டார்கள்? யார் நிரூற்றிப் பராமரித்தார்கள்? யார் பலனெடுக்கிறார்கள்? வேலிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/114&oldid=1049649" இலிருந்து மீள்விக்கப்பட்டது