பக்கம்:உத்தரகாண்டம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    173

உடைத்தாற் போல் இருக்கம் உடைபடுகிறது. “வ்லாசம் கேட்டாரு. வ்லாசம் என்ன, நான் கூட்டிப் போறேன். எதுக்கும் அவுரப் பாக்கணும்... தா, பூங்காவார்டு பக்கம், தொந்தரவாகீது. ஒரு மீட்டிங் எதுனாலும் வய்க்கணும். நம்ம சின்னவரக் கூட்டிட்டு வரணும். கொஞ்சம் காசு செலவு பண்ணனும். இலக்சன் வருதுன்னு சொல்றாங்க...” தேடிச் சென்று அருவருப்பை மிதித்து விட்டாற் போல் கூச்சம் ஏற்படுகிறது.

“கச்சி விவகாரமெல்லாம் வாணாம்பா, குழந்தவேலு. சும்மாத்தான் மருமக, பேரப்புள்ளங்கல்லாம் பாக்கணும்னு கேட்டே. என் மக, அமெரிக்காலேந்து வந்திருக்காளாம்...”

“ஆமாம்மா, சந்திரி டாக்டர்தானே? அவங்க மககூட பெரி டாக்டர் படிச்சிட்டு, எம்மக இருக்கிற ஆஸ்பத்திரியிலதா வந்திருக்குதாம்... சந்திரி அம்மாக்குத்தா, அமெரிக்கால கார் ஆக்ஸிடென்டாகி, ஒரு கை பலமில்லாம போயிடிச்சாம்...”

இவளுக்குத் தெரியாத பல செய்திகளை வைக்கிறான்.

“அப்ப நாளக்காலம, நா டூட்டி முடிச்சி, குளிச்சி முழுவிட்டு வாரன். வாடகக்காரெடுத்திட்டு வரட்டுமா?”

“அய்யய்ய, அதெல்லாம் வாணாம்பா! நீ எப்படிப் போவ...?”

“நாம் போவ...’ என்று வானைப் பாத்துப் பொக்கைப் பல் தெரிய ஒரு சிரிப்பு மலருகிறது.

“பஸ்சிலியா போவ... அதலு நானும் வார..?”

இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை.

வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை அநுமானிக்க முடியவில்லை.

காலையில் எழுந்து நெடுந்தொலைவு பயணம் செய்யப் போகும் உணர்வுடன் தயாராகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/175&oldid=1050035" இலிருந்து மீள்விக்கப்பட்டது