பக்கம்:உத்தரகாண்டம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   201


குழந்தை விளையாட்டுத் தனமாக அந்தப் பொருளை வீணாக்கிவிட்டு மறுபடியும் பொருத்த முடியாமல் அழுதான்.

“வேறு வாங்கிக் கொடுக்கிறேன்...” என்று சமாதானம் சொன்னார்கள்.

குழந்தை விளைவு தெரியாமல் விளையாடியது.

நல்லதொரு கோலம் காட்டிய பொருள் அழிந்தது.

குழந்தை அந்த ஒட்டுக்காகிதங்களை விளையாட்டாகப் பிரித்தது. இப்போது இவர்களும் அதே போன்ற விளையாட்டில்தான் ஈடுபட்டிருக்கிறார்களா? இந்திரா அம்மை அஞ்சிக் கரித்துக் கொட்டி சிறையில் தள்ளியவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். நாட்டில் என்னென்னமோ நடக்கிறது. கண்ணாடித் துண்டுகள் சிதறி விழுந்தாற் போல், அத்தனை வண்ணங்களும் இந்த தேச மக்களை, வாழ்க்கையை பொய், கபடு, சூது, வன்முறை இரத்தக்கறை என்றாக்கிவிட்டு அழிந்துவிட்டன.

அவள் இப்போது என்ன செய்ய வேண்டும்? குருகுலத்தில் அவர்கள் காட்டும் மூலையில் குடிபெயர வேண்டுமா? சந்திரி கூப்பிட்டதை ஏற்று, நீரடித்து நீர் விலகாது என்பதை நிரூபிக்க வேண்டுமா?...

ஒன்றும் புரியவில்லை. அந்தக் காலத்தில் தேசாந்தரம் போவது என்பார்கள். எல்லாவற்றையும் துறந்து காசிக்கு நடந்தே போனார்களாம்! கேதர்நாதம், பத்ரிநாதம் என்று போவார்கள், திரும்பி வரமாட்டார்கள் என்பார்கள். ஏன்? இந்த அய்யப்பர்கள் கறுப்பைக் கட்டிக் கொண்டு தொண்டை கிழிய காது செவிடு படச் சரணம் கூவுகிறார்கள். கோயிலுக்குப் புறப்படுமுன் வாய்க் கரிசி போடுகிறார்கள்... காரணம் அவ்வளவு அபாயங்களையும் கடந்து போகிறவர்கள் திரும்பி வரமாட்டார்கள்...

காலையில் இவள் வாசல் தெளிக்கும் போது, மாலை போட்ட பக்தர்கள் சுமையுடன் கிளம்பிவிட்டார்கள். கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/203&oldid=1050084" இலிருந்து மீள்விக்கப்பட்டது