பக்கம்:உத்தரகாண்டம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224   ✲   உத்தரகாண்டம்

ஆசிரமமே கொல்லுனு ஆயிட்டது. ரயில் பாதையைக் குறுக்கே தாண்டிப் போயிருக்காரு, விடியக்காலம் பாதையோரம் நடக்கப் போவாரு, விபத்துன்னு பேப்பர்காரங்க தகவல போட்டாங்க- அய்யாகூட இரங்கல் கூட்டத்துக்கு வந்து கண்ணீர் விட்டார். பராங்குசம் உருகினான். சுசீலா டீச்சர் பிறகு வரவேயில்லை...”

‘அட...பாவி...? இ...இது கொலையில்லியா? ஒரு அகிம்சைக் கோயிலில கொலைகாரப் பாவி அப்பவே உருவாயிட்டானா?...”

“ஆமாம்மா. இவன் சுசீலா டீச்சருக்கு மருதமுத்து சகவாசம் நெருக்கமாக இருப்பதாகவும், அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து ஆசிரமத்தின் பேரைக் காப்பாற்றுங்கள் என்று ஒரு சக டீச்சர் எழுதுவதுபோல் மொட்டைக் கடிதாசி அண்ணன் பேருக்கு எழுதி இருக்கிறான். அவங்க உசந்த சாதி. சநாதனக் குடும்பம். இவரு தாழ்ந்த சாதி. அதுவும் விதவா விவாகத்தை ஏத்துக்காதவங்க. குழந்தை வேற இருக்கு. மருதமுத்துவை விசாரணை என்ற பேரில் என்ன சொன்னானோ? அவரு உசிரையே தியாகம் செய்தாரு... அடுத்த இலக்கு நான்.”

ஏலக்காயும் கிராம்பும் கர்ப்பூரமும் மணக்கும் பெட்டி என்று நினைத்திருந்தாளே? அதன் உள்ளிருந்து மோசமான பாச்சைப் புழுக்கையும் கரப்பான் புழுக்கைகளும் வெளியாகின்றன.

“அம்மா போயி, அய்யாவும் ஓய்ந்து போயிருந்தாங்க. இவன் அவங்க வரபோதெல்லாம் பிரமாதமா சத்திய ஜோடனை செய்து வச்சிருப்பான். எனக்கே ஒண்ணும் அப்பல்லாம் தெரியலன்னா பாருங்க? நிர்வாகமே கொஞ்சம் கொஞ்சமா காந்தி சத்தியத்தில் இருந்து நழுவி, கறைபடிய ஆரம்பித்திருக்கு- கணக்கு வழக்கெல்லாம், அவன் பேரில் தனிச் சில்லறை சேரும் வழி கண்டு பிடிக்கச் சொல்லிக் கொடுத்தது. எல்லோரையும் கைக்குள் போட்டுக் கொள்ளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/226&oldid=1050163" இலிருந்து மீள்விக்கப்பட்டது