பக்கம்:உத்தரகாண்டம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286   ✲   உத்தரகாண்டம்

லாம் இந்த வட்டத்துக்குள்ள நுழயவுடக் கூடாதுன்னு சொன்னா, உங்க மகன் காதிலியே போட்டுக்கிறதில்ல. நம்ம வீட்ல, சின்னஞ்சிறிசு நடமாடுற இடம்.

“இவ சிரிச்சிக்குழஞ்சி, சாதுரியமாப் பேசி, புளியங்கொம்புன்னு புடிச்சிக்குவாளுவ. லாட்ஜிலை ஓட்டல்ல வாடிக்கை வச்சிட்டு, வயித்தில வாங்கிக்கிட்டு, உங்க மகன்தான்னு சத்தியம் செய்யத் துணிஞ்சவளுக...”

அவளுக்குக் காதுகளைப் பொத்திக் கொள்ளக் கைகள் பரபரக்கின்றன. பாம்பின் கால் பாம்பறியும். இவள் அப்படி வந்தவள்தானே?

“ஏம்மா, அநாவசியமா ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணப் பழி சொல்லணும்...? டாக்டருக்குப் படிச்சிருக்கிற பொண்ணு...”

“அத்தே, அப்படியெல்லாம் நினச்சி எடபோடக்கூடாது. இந்தக் காலத்தில இதுபோல பொண்ணுகளுக்கு வெக்கம் மானம் கூச்சம் ஒண்ணுமே கிடையாது. கூட்டத்துல தோள் உரசினாக்கூட, காது மூக்கு வச்சி, இவன் கற்பழிச்சான்னு கோர்ட்டுல துணிஞ்சி விவரிக்கும் சாதி. நாமன்னா செத்திடுவம். அதும் இவ டாக்டர்ங்ற பேருல லைசன்ஸ் இல்லாம நுழையிற வருக்கம். அதும் இது பெரிய ரவுடி. மெடிகல் படிக்கணும், இன்ன குலம், மறுவாழ்வுன்னு உதவி கேட்டு வந்தா. சூடிகையா இருக்கான்னு, இவங்க உதவி செஞ்சாங்க. அதையே சாக்கா வச்சிட்டு, அக்காவைப் பாக்க வரும். நானும் கபடில்லாம தான் நினச்சிருந்தேன்... இப்ப நீங்க கூட அன்னைக்கு அந்தப் பையனுக்காக நியாயம் சொன்னீங்களே. எந்தப் பயலோ, எவ கையையோ புடிச்சி இழுத்திருக்கிறா. விபரீதம் நடந்திடிச்சி. அத நம்ம பையன் மேல போட்டு கேசு தொடுக்கத் தூண்டுனதே இவதா. ஒரு குடும்பத்துக்குள்ளியே எதிர்க்கட்சி பண்ணுது. மானம் கெட்ட சன்மங்க. இந்த வூட்டுமருவன்னு சொல்லிட்டுத் திரியிறாளாம். இவ படிச்சிப் பாஸ் பண்ணா, சர்வீஸ் பண்ணனும்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/288&oldid=1050369" இலிருந்து மீள்விக்கப்பட்டது